Trichy News : திருச்சி விவசாயிகள் பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு
Trichy News : திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு விவரத்தை இங்கே பார்க்கலாம்...
1/6
திருச்சி விவசாயிகளுக்கு அழைப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் “பயிர்க்கடன்" பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2/6
பயிர்க்கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் எல்லைக்குட்பட்ட சிறு மற்றும் குறு விவசாய உறுப்பினர்களுக்கு "இகேசிசி" முறையில் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது.
3/6
புதிய உறுப்பினர் சேர்க்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 148 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுவரை உறுப்பினர் இல்லாத சிறு மற்றும் குறு விவசாயிகள் 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் மற்றும் 100 ரூபாய் பங்குத் தொகை செலுத்தி புதிய உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம்.
4/6
இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம்
பயிர்க்கடன் பெற சங்கங்களை நேரில் அணுகியோ அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ இகேசிசி (ekcc) முறையில் விண்ணப்பித்து பயிர்கடன் பெற்றுக் கொள்ளலாம்.
5/6
பிணையில்லாத லோன்
ரூ.1.60 இலட்சம் வரை எவ்விதப் பிணையமும் இன்றியும் ரூ.3 இலட்சம் வரை நகை மற்றும் நில அடமானத்தின் பேரில் கடன் பெறலாம். இக்கடன்களுக்கான தவணைக் காலம் ஒரு ஆண்டாகும்.
6/6
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தவணை தேதிக்குள் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு எவ்வித வட்டியும் கிடையாது. எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி பயிர் கடன் பெற்று பயன்பெறலாம் ஆட்சித்தலைவர் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.