• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /திருச்சி குட் நியூஸ்! கர்ப்பிணிகளை கண்காணிக்க புதிய மொபைல் செயலி

திருச்சி குட் நியூஸ்! கர்ப்பிணிகளை கண்காணிக்க புதிய மொபைல் செயலி

Written ByKarthikeyan Sekar
Published: Nov 05, 2026, 09:47 AM IST|Updated: Nov 05, 2026, 09:49 AM IST
joinshare
Trichy latest news : தாய்-சேய் நலனை காக்க களமிறங்கிய புதிய மொபைல் ஆப் அறிமுகப்படுத்தி திருச்சி மாவட்ட நிர்வாகம் புதிய முன்னெடுப்பு.

Trichy latest news : திருச்சியில் ஆபத்தான கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை கண்காணிக்க ‘Mother-Child App’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

Trichy latest news1/5

புதிய மொபைல் செயலி

திருச்சி மாவட்டத்தில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் வகையில், ‘Trichy Mother-Child Monitoring App’ என்ற புதிய மொபைல் செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Trichy latest news2/5

அமைச்சர்கள் தொடங்கிவைப்பு:

அமைச்சர்கள் தொடங்கிவைப்பு: மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியை, திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.
Trichy latest news3/5

சிறப்புக் குழுவினர் அடையாளம் கண்டுபிடிப்பர்

நேரடிக் கண்காணிப்பு முறை: அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள், மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோரை மாவட்ட அளவிலான சிறப்புக் குழுவினர் அடையாளம் கண்டு செயலியில் பதிவு செய்வர்.
Trichy latest news4/5

கிராம செவிலியர்களுக்கு உடனடித் தகவல்

கிராம செவிலியர்களுக்கு உடனடித் தகவல்: பதிவேற்றப்படும் விவரங்கள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவ அலுவலர்களுக்கு நேரலையாகக் கிடைக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட தாய்-சேய்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும், அவசர சிகிச்சைகளையும் அவர்கள் தாமதமின்றி உடனடியாக வழங்க முடியும்.
Trichy latest news5/5

மாவட்ட நிர்வாகத்தின் நேரடிப் பார்வை

மாவட்ட நிர்வாகத்தின் நேரடிப் பார்வை: சிகிச்சைகள் மற்றும் உதவிகள் முறையாகச் சென்றடைகின்றனவா என்பதை மாவட்ட உயர் அதிகாரிகள் செயலியின் வழியே நேரடியாகக் கண்காணிப்பர். இத்திட்டம் திருச்சி மாவட்டம் முழுவதும் தாய்-சேய் சுகாதாரப் பாதுகாப்பை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
நன்செய் நிலத்தை மனையாக மாற்ற கிடுக்கிப்பிடி: தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

நன்செய் நிலத்தை மனையாக மாற்ற கிடுக்கிப்பிடி: தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

2

சொந்தமாக 'Food Truck' பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சி

3

சென்னை முருகன் கோவில்களுக்கு ஒருநாள் டூர்... தமிழக அரசு அறிவிப்பு

4

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

5

தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் போடலையா... இதோ Unreserved ரயில்கள் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.