• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /புரட்டாசி மாதம்: ஒரே நாளில் 7 பெருமாள் கோயில்கள்.. ரூ.1,000 கட்டணத்தில் ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசின் ஏற்பாடு!

புரட்டாசி மாதம்: ஒரே நாளில் 7 பெருமாள் கோயில்கள்.. ரூ.1,000 கட்டணத்தில் ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசின் ஏற்பாடு!

Written ByUmabarkavi K
Published: Sep 17, 2026, 12:36 PM IST|Updated: Sep 17, 2026, 12:42 PM IST
joinshare
TTDC Purattasi Perumal Temple Tour: புரட்டாசி மாதத்தையொட்டி, பக்தர்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பெருமாள் கோயில்கள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஒருநாள் சுற்றுலாவில் சென்னையில் உள்ள பிரபல வைணவ கோயில்களுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது.

TTDC Purattasi Perumal Temple Tour: பெருமாள் கோயில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு கட்டணமாக ரூ.1,000  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் சுற்றுலா செல்பவர்கள் உடனே முன்பதிவு செய்யுங்கள்.
 

TTDC Purattasi Tour1/5

நாளை (செப்.18) புரட்டாசி மாதம் பிறக்கிறது

தமிழ் மாதங்களில் ஆன்மீக ரீதியாக முக்கியமான மாதமாக புரட்டாசி உள்ளது. பெருமாள் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் வைணவ கோயில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நிலையில் தான், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது.
TTDC Purattasi Tour2/5

TTDC-ன் ஒரு நாள் பெருமாள் கோயில் சுற்றுலா

பெருமாள் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா திட்டம் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை, மதுரை, திதச்சி, தஞ்சாவூருக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.1,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் எந்தெந்த கோயில்களுக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது என்பதை பார்ப்போம்.
TTDC Purattasi Tour3/5

சென்னை பெருமாள் கோயில் சுற்றுலா தலங்கள்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம், ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கபெருமாள் பாடலாதிரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் உள்ளிட்ட 6 பெருமாள் திருக்கோயில்களில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TTDC Purattasi Tour4/5

எந்தெந்த பெருமாள் கோயில்களுக்கு சுற்றுலா செல்லலாம்?

மேலும், திருவள்ளூர் திருமழிசை ஜெகநாத பெருமாள் திருக்கோயில், வீரராகவ பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட 7 பெருமாள் திருக்கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில், சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
TTDC Purattasi Tour5/5

பெருமாள் கோயில் சுற்றுலாவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை

மேற்கண்ட ஆன்மீக சுற்றுலா இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புவோர் ttdcoonline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800 425 31111, 75500 63121, 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
TAGS:
Tour Travel

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.