• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /வித்யா பாலனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு?

வித்யா பாலனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு?

Written ByR Balaji
Published: Oct 10, 2026, 03:02 PM IST|Updated: Oct 10, 2026, 03:06 PM IST
joinshare

பாலிவுட் நடிகை வித்யா பாலனின் திரைப்பட சம்பளம், சொத்துமதிப்பு, மாதவனுடன் புதிய பட கூட்டணி, ரஜினி–அஜித் பட அனுபவம் மற்றும் அவரது தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
 

Tamil Cinema1/6

வித்யா பாலனின் சம்பளம் எவ்வளவு?

பாலிவுட்டில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருபர் வித்யா பாலன். தனது நடிப்பு திறமையால் தனி அடையாளத்தை பெற்றுள்ள இவர், ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
Tamil Cinema2/6

ரூ. 136 கோடி சொத்து மதிப்பு

வித்யா பாலனின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ. 136 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
Tamil Cinema3/6

தமிழ் படத்தில் வித்யா பாலன்

இயக்குநர் ஆர்.பால்கி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வித்யா பாலன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. அனால் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவில்லை என்றும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி வருவதாகவும் பால்கி தெரிவித்துள்ளார்.
Tamil Cinema4/6

மாதவனுடன் கூட்டணி

ஆர். பால்கி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பால்கி இயக்கத்தில் மாதவன் நடிப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. அதேசமயம், வித்யா பாலன் ஏற்கனவே பால்கியின் இயக்கத்தில் நடித்த அனுபவம் கொண்டவர். இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Cinema5/6

ரஜினி, அஜித் படங்களில் வித்யா பாலன்

வித்யா பாலன், அஜித் குமாருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார். மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்திலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
Tamil Cinema6/6

காமெடி ரீல்ஸ்

வித்யா பாலனுக்கு பாரம்பரிய உடைகள், குறிப்பாக பட்டுச் சேலைகள் மீது அதிக விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. விருது விழாக்களிலும் அழகான சேலைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மறுபுறம், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் நகைச்சுவை ரீல்ஸ்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துகொண்ட வித்யா பாலனுக்கு, அவரது கணவரும் திரைப்பயணத்தில் ஆதரவாக இருந்து வருகிறார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

2

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் பல உச்சங்களை எட்டப்போகும் 3 ராசிகள் இவைதான்

3

பிரதமர் மோடி வருகை... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

4

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

பழைய கடனைப் புதுப்பித்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? கூட்டுறவு வங்கியின் புதிய விதிகள் சொல்வது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.