• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம் ஏன்? மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம் ஏன்? மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

Written ByUmabarkavi K
Published: Oct 08, 2026, 05:25 PM IST|Updated: Oct 08, 2026, 05:35 PM IST
joinshare
Chennai Latest News: சென்னை திருவான்மியூரில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, கார் கவிழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Chennai Latest News:  இந்த விபத்தில் கார் ஓட்டுநர நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
 

Chennai Thiruvanmiyur Incident1/5

சென்னை திருவான்மியூர் சாலையில் பள்ளம்

சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. திருவான்மியூர் அருகே ராஜீவ் காந்தி சாலையில் இன்று காலை 10.00 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த வாகனம் திடீரென பள்ளத்தில் சிக்கியது. மத்திய கைலாஷிலிருந்து டைடல் பூங்காவை நோக்கிச் கார் சென்றுக் கொண்டிருந்தது.
Chennai Thiruvanmiyur Incident2/5

சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய இரண்டு பேர்

சாலையின் ஒரு பகுதி பள்ளம் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக வந்த கார் திடீரென பள்ளத்தில் விழுந்தது. அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினரின் உதவியுடன் ஓட்டுநர் வெளியேறினார். காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இரண்டு பேர் இருந்தனர்.
Chennai Thiruvanmiyur Incident3/5

சாலையில் பள்ளம் ஏற்பட்டது எப்படி - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

இருவரும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சென்னை திருவான்மியூரில் இருந்து தரமணி நோக்கி செல்லும் சாலையில் திருவான்மியூர் ரயிலடி எதிரே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
Chennai Thiruvanmiyur Incident4/5

பள்ளத்தை கான்கிரீட் கொண்டு நிரப்பும் பணி நடக்கிறது

சென்னை மெட்ரோ 2ம் கட்டத் திட்டத்தின் 3வது வழித்தடத்திற்கான சுரங்கப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலை பள்ளம் ஏற்பட்டது. சுரங்கு தோண்டு பவானி இயந்திரத்திற்கு அருகில் எல்நெட் கட்டிடம் எதிரே ஓஎம்ஆர் சாலையில் நிலச்சரிவு பள்ளம் ஏற்பட்டது. தற்போது அப்பள்ளத்தை கான்கிரீட் கொண்டு நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை, தளப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
Chennai Thiruvanmiyur Incident5/5

போலீசார் விசாரணை

திடீர் பள்ளம் ஏற்பட்டது குறீத்து தொழில்நுட்ப விசாரணை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவாட்டர் மற்றும் TNRDC குழுவினர் அந்த இடத்தை தடுப்புக்கம்பிகளால் சுற்றி வளைத்து, மண் நிரப்புதல் மற்றும் கான்கிரீட் பூச்சு உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கிண்டி போக்குவரத்துப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

2

தமிழக அமைச்சரவையில் பாமக? தவெகவின் அதிரடி நகர்வு.. என்ன செய்யும் விசிக?

3

அடல் பென்ஷன் திட்டம்: மாதம் வெறும் ரூ.210 டெபாசிட் செய்து ரூ.5,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?

4

புவனேஷ்வர் குமார் இந்திய அணி கம்பேக்.. RCB-க்கு ஏற்பட்ட சிக்கல்? Explained

5

எலான் மஸ்க் vs இந்திய அரசு: ஸ்டார்லிங்க் விவகாரம் - பின்னணியில் அம்பானி மோதலா? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.