• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /புதுச்சேரி
  • /புதுச்சேரியில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி: கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

புதுச்சேரியில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி: கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 12 அன்று ஆடி அமாவாசை தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. நகரின் பல கோவில்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.

Written ByShiva Murugesan
Published: Aug 12, 2026, 15:52 IST|Updated: Aug 12, 2026, 16:10 IST
joinshare
புதுச்சேரியில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி: கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
Image Credit: File | Puducherry Aadi Amavasai Theerthavari 2026

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

புதுச்சேரி கடற்கரையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு வெகுவிமரிசையாகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை, கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்ற இந்நிகழ்வில், புதுவையின் பல்வேறு பகுதிகளிலுள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர்.

ஆடி அமாவாசை தீர்த்தவாரி

காந்தி வீதி அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில், மணக்குல விநாயகர் கோவில், சாரம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் இருந்து சுவாமிகள் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி கண்டருளினர். ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி இறைவனை வழிபடுவது விசேஷம் என்பதால், அதிகாலை முதலே கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்துடன் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாத அமாவாசை முன்னோர்களுக்குத் தர்ப்பணம்

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகம் எதிரே ஆகஸ்ட் 12 அன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

புதுச்சேரி நகரம், கிராமப் பகுதிகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே பொதுமக்கள் கடற்கரையில் குவிகினர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், வேத மந்திரங்கள் முழங்க மறைந்த தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிப் பித்ரு சடங்குகளைச் செய்தனர்.

கடற்கரை பகுதி மட்டுமன்றி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆற்றுப் பகுதிகள் மற்றும் நீர்நிலைகளிலும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Puducherry