SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க ஊசி போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!

Puducherry: புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை! தேர்வு பயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குடும்ப/தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் பெரியகடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 18, 2026, 13:28 IST | Updated: Sep 18, 2026, 13:35 IST
Image Credit: Representative / Puducherry Student Suicide
Join

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் பிரிவில் எம்.டி. (M.D.) இறுதியாண்டு படித்து வந்த 26 வயது இளம் பெண் மருத்துவர் யோகலட்சுமி, மயக்க ஊசி செலுத்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தற்கொலை: நடந்தது என்ன?

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி வாசுதேவன். இவரது மகள் யோகலட்சுமி, கல்லூரித் தேர்வுகளுக்காகத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தின் காரணமாக அவர் சோர்வுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய பின்னர், யோகலட்சுமி தூங்குவதற்காகத் தனது அறைக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் யோகலட்சுமி அறையை விட்டு வெளியே வரவில்லை. பெற்றோர் கதவைத் தட்டியும், தொலைபேசியில் அழைத்தும் எவ்விதப் பதிலும் வராததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது, படுக்கையில் யோகலட்சுமி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலின் அருகே காலியான மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் இன்சுலின் ஊசி மருந்துகள் இருந்ததை பெற்றோர் கண்டனர்.

மேலும் படிக்க | Explanation | புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வெல்லப்போவது யார்? போட்டி தீவிரம்!

போலீஸாரின் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை காவல் துறையினர், யோகலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், யோகலட்சுமி ஊசி மூலம் உடலில் மயக்க மருந்து மற்றும் இன்சுலினைச் செலுத்தித் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

அவரது அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் யோகலட்சுமி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

"எனது தற்கொலை முடிவுக்கு நானே பொறுப்பு; இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம். எனது இந்த தவறான முடிவிற்காகப் பெற்றோர் மற்றும் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்"

மேலும் படிக்க | புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான 12 மாற்று ஆவணங்கள்

காவல்துறையின் தொடர் நடவடிக்கை

தேர்வு பயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குடும்ப/தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் பெரியகடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநல உதவி எண்கள்

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!

தற்கொலை எண்ணங்கள் அல்லது கடுமையான மன உளைச்சல் ஏற்படும் நேரங்களில் உடனடியாக மனநல நிபுணர்கள் அல்லது உதவி மையங்களைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050 (24 மணி நேரம்)

மேலும் படிக்க | புதுச்சேரி அரசியல் விவகாரங்கள்: மாநில அந்தஸ்து முதல் மீனவர் கோரிக்கைகள் வரை -முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES