SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புதுச்சேரி ரயில் நிலையத்தில் அட்டகாசமான மாற்றங்கள்: ‘அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் தீவிரம்

Puducherry: புதுச்சேரியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளின் வருகை மற்றும் ரயில் நிறுத்தத்திற்கான வசதிகளை மேம்படுத்த ரயில் தண்டவாளம் மற்றும் பிளாட்பார்ம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 02, 2026, 01:53 PM IST | Updated: Oct 02, 2026, 02:01 PM IST
Join

புதுச்சேரி: இந்தியாவின் பிரதான சுற்றுலா நகரங்களில் ஒன்றாகத் திகழும் புதுச்சேரிக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை சமாளிக்கும் வகையில் புதுச்சேரி ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளின் வருகை மற்றும் ரயில் நிறுத்தத்திற்கான வசதிகளை மேம்படுத்த ரயில் தண்டவாளம் மற்றும் பிளாட்பார்ம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐந்தாவது ரயில் பிளாட்பாரம்

புதுச்சேரியில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஐந்தாவது ரயில் தண்டவாளம் மற்றும் கூடுதல் பிளாட்பார்ம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சுமார் ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெறுகின்றன.

தற்போது இருக்கும் செயல்முறையின்படி நான்காவது பிளாட்பார்ம் ஒருபுறம் மட்டுமே ரயில்கள் வந்து செல்லும் ஒற்றைப் பக்க பிளாட்பார்ம் ஆக செயல்பட்டு வந்தது. இப்போது இரு புறங்களிலும் ஒரே நேரத்தில் ரயில்களை நிறுத்தும் வகையில் ‘ஐலேண்ட் பிளாட்பார்ம்’ ஆக மேம்படுத்தப்படுகின்றது.

மேலும் படிக்க | புதுச்சேரி: 9 வயது சிறுமி கொலை வழக்கு..குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

500 மீட்டர் நீளத்தில் உள்கட்டமைப்பு

தற்போது அமைக்கப்பட்டவரும் புதிய பிளாட்பார்ம் மற்றும் தண்டவாளம் அமைக்கும் பணிகள் வாணரப்பேட்டை சந்திப்பில் உள்ள மத்திய அரசின் உணவு தானிய கிடங்கு அருகே தொடங்கி புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன பார்சல் அலுவலகம் வரை மேற்கொாள்ளப்பட்டு வருகின்றன. இந்த பிரம்மாண்ட உள் கட்டமைப்பு 550 மீட்டர் நீளமும், 10.30 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும்.

மேலும் படிக்க | புதுச்சேரியில் இன்று முதல் பேனர், விளம்பர பலகைகள், கட்அவுட்களுக்குத் தடை

நெரிசலுக்கு முற்றுப்புள்ளியும் வர்த்தக நன்மைகளும்

வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்கள் மற்றும் சுற்றுலா சீசன்களில் ஏற்படும் கடும் நெரிசலைக் குறைக்கவும், ஒரே நேரத்தில் பல ரயில்களைக் கையாளவும் இந்த புதிய 5-வது தடம் வழிவகுக்கும். பயணிகள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் வந்து செல்ல இது உதவும்.

மேலும், புதிய பார்சல் அலுவலகத்தை ஒட்டியே இந்த தண்டவாளம் அமைவதால் வணிகப் பொருட்கள் மற்றும் பார்சல்களை ஏற்றுவதும் இறக்குவதும் எளிதாகும். இது உள்ளூர் வர்த்தகர்களுக்குப் பெரும் பயனாக அமையும்.

2028-ல் முழுமையான பயன்பாடு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திலான கட்டடக் கலை, நவீன மின்சார வசதிகள், தகவல் பலகைகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (Escalators) ஆகியவற்றுடன் புதுச்சேரி ரயில் நிலையம் தயாராகி வருகிறது. எதிர்காலத்தில் புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் இந்த உள்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் 2028-ம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழகம், புதுச்சேரி: வரிமான வரித்துறையில் வேலை, 146 காலியிடங்கள்.... யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES