• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /புதுச்சேரி
  • /புதுச்சேரி இன்றைய செய்திகள்: குப்பை தொட்டியில் வீசப்பட்ட பால் முதல் விவசாயிகள் போராட்டம் வரை

புதுச்சேரி இன்றைய செய்திகள்: குப்பை தொட்டியில் வீசப்பட்ட பால் முதல் விவசாயிகள் போராட்டம் வரை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பு, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பான்லை பால் பாக்கெட்டுகள், நெல் விவசாயிகள் சட்டசபை முற்றுகை போராட்டம் மற்றும் சென்டாக் பி.டெக் சேர்க்கை அறிவிப்பு உட்பட புதுச்சேரியின் இன்றைய முக்கியச் செய்திகளின் முழுத் தொகுப்பு.

Written ByShiva Murugesan
Published: Aug 20, 2026, 17:29 IST|Updated: Aug 20, 2026, 17:38 IST
joinshare
புதுச்சேரி இன்றைய செய்திகள்: குப்பை தொட்டியில் வீசப்பட்ட பால் முதல் விவசாயிகள் போராட்டம் வரை
Image Credit: Ai Generator | Puducherry Top Headlines: CM Rangasamy Skips South Zone CMs Conference

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கோவலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்த நிலையில், ஆளுநர் கைலாசநாதன் பங்கேற்றார். மற்றொரு புறம், நிலுவைத் தொகையைக் கோரி நெல் விவசாயிகள் சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். ராஜ்பவன் பகுதியில் பான்லை பால் பாக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் இன்றைய (20/08/2026) முக்கியச் செய்திகள் குறித்து பார்ப்போம்.

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: ஆளுநர் பங்கேற்பு, ரங்கசாமி புறக்கணிப்பு

சென்னையை அடுத்த கோவலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரி ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநர் கைலாசநாதன் இதில் கலந்து கொண்ட சூழலில், முதலமைச்சர் ரங்கசாமி இம்மாநாட்டை புறக்கணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க - முதலமைச்சர் ரங்கசாமி ஏன் தென்மண்டல மாநாட்டில் பங்கேற்கவில்லை? காரணம் இதுதான்!

குப்பைத் தொட்டியில் காலாவதியான பான்லை பால் பாக்கெட்டுகள்

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட குமரகுரு பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட 'பான்லை' பால் பாக்கெட்டுகள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர். இது விற்பனையாகாத பாக்கெட்டுகளா அல்லது தனி நபரால் வீசப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு: சென்டாக் அறிவிப்பு

புதுச்சேரியில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் (CGL), தாள்-1 பொதுவானது என்பதால் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏதேனும் ஒரு மையத்தில் எழுதலாம். ஆனால், மேல்நிலை எழுத்தர் மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கான 'தாள்-2' தேர்வுகளை, அதற்குரிய நுழைவுச் சீட்டில் (Admit Card) குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட மையத்தில் மட்டுமே எழுத வேண்டும் எனத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ குமார் ஜா தெளிவுபடுத்தியுள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், 50% அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு மேடை சார்பில் சுதேசிய மில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞர் காங்கிரஸ் சார்பில் 'பெட்டர் சிட்டீஸ்' இயக்கம்

பொதுமக்களின் குடிநீர், சாலை, கழிவுநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை நகர்ப்புறப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 'பெட்டர் சிட்டீஸ்' (Better Cities) இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அன்ஆர்கனைஸ்டு செக்டார் தொழிலாளர்களின் நலன் காப்பதே இதன் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு உரம் விற்கத் தடை: புதுவை அரசு எச்சரிக்கை

புதுச்சேரியில் உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள், புதுவையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே உரங்களை விற்க வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளுக்கு விற்கக் கூடாது என்றும் வேளாண் துறை இயக்குநர் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். மீறுபவர்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால வழிகாட்டுதல்: இயற்கை விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரசாயன சாயங்கள் மற்றும் பிளாஸ்டிக்/தெர்மக்கோல் பயன்படுத்தப்படாத, களிமண் போன்ற இயற்கை மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் அறிவுறுத்தியுள்ளது. சிலை தயாரிப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் முன்ப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சட்டசபை முன்பு நெல் விவசாயிகள் திடீர் போராட்டம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் விற்பனை செய்து இரு மாதங்களாகியும் நிலுவைத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, நெல் விவசாயிகள் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்திக்கச் சட்டசபை முன்பு திரண்டனர். முதலமைச்சர் வராததால் அங்கு திடீர் போராட்டம் வெடித்தது. பின்னர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளித்து கலைந்து சென்றனர்.

பிற முக்கியச் செய்திகள் துளிகள்:

மருத்துவ அதிகாரி பணிப் பட்டியல்: காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலான 10 பொதுப்பணி மருத்துவ அதிகாரிகளின் தேர்வுப் பட்டியலைச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

குரு ரவிதாஸ் 650-வது ஜெயந்தி: வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித மண் கலசத்திற்கு பாஜக சார்பில் அம்பேத்கர் நகர் செங்கழுநீர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைத்துத் தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

சென்டாக் மூன்றாம் கட்ட கலந்தாய்வு: பி.டெக் இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கைக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோர், ஆகஸ்ட் 21 மாலை 5 மணிக்குள் சென்டாக் (CENTAC) இணையதளத்தில் புதிய விருப்பப் பாடங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சாலை விபத்தில் விவசாயி பலி: கூனிச்சம்பட்டைச் சேர்ந்த விவசாயி வாசுதேவன் பைக் மீது லோடு கேரியர் லாரி மோதிய விபத்தில் பலியானார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் கைது செய்தனர்.

மேலும் படிக்க - ஆதார் இணைக்காவிட்டால் மானியம் நிறுத்தம்! புதுச்சேரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆகஸ்ட் 21 வரை கெடு

Add Zee News as a Preferred Source
TAGS:
Puducherry