• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /புதன் சனியால் உருவாகும் விபரீத யோகம்... இந்த 4 ராசிகள் உஷார்.. பணம், வேலையில் ஜாக்கிரதை

புதன் சனியால் உருவாகும் விபரீத யோகம்... இந்த 4 ராசிகள் உஷார்.. பணம், வேலையில் ஜாக்கிரதை

Shadashtak Yog: புதனும் சனியும் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது. இதனால், அக்டோபர் 9ஆம் தேதி முதல் சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல் உண்டாகும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 05, 2026, 08:41 AM IST|Updated: Oct 05, 2026, 08:46 AM IST
joinshare
புதன் சனியால் உருவாகும் விபரீத யோகம்... இந்த 4 ராசிகள் உஷார்.. பணம், வேலையில் ஜாக்கிரதை

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
விலகும் தென்மேற்கு பருவமழை.. அடுத்த 5 நாட்கள் வெளுக்கும் மழை.. டெல்டா வெதர்மேன் அலர்ட்

விலகும் தென்மேற்கு பருவமழை.. அடுத்த 5 நாட்கள் வெளுக்கும் மழை.. டெல்டா வெதர்மேன் அலர்ட்

2

திமுகவிற்கு 1, அதிமுகவிற்கு 1.. ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்? போட்டுடைத்த தராசு ஷ்யாம்!

3

புதன் சனியால் உருவாகும் விபரீத யோகம்... இந்த 4 ராசிகள் உஷார்.. பணம், வேலையில் ஜாக்கிரதை

4

நடுவானில் மரண பயம்: 34,000 அடியில் கோடரி தாக்குதல்... 170 பயணிகள் உயிர் தப்பியது எப்படி? Flydubai FZ1073 Explainer!

5

அக்டோபர் 2026 ஓடிடி ரிலீஸ்: இந்த மாதம் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் லிஸ்ட் இதோ!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shadashtak Yog: ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சியின்போது நேர்மறை மற்றும் எதிர்மறையான ஆற்றல் உண்டாகும். இதனால், 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையல், அக்டோபர் 9ஆம் தேதி புதன் மற்றும் சனி கிரகங்களுக்கு இடையே ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இரண்டு கிரகங்கள் ஆறாம் மற்றும் எட்டாம் வீடுகளில் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும்போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது. இந்த கிரகங்களுக்கு இடையில் உருவாகும் இந்த யோகம் சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

ஷடாஷ்டக யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பாராத சில செலவுகள் திடீரென்று ஏற்படலாம். எந்த விதமான நிறுவனங்களில் முதலீடும் செய்வதற்கு முன்பு, அதன் அனைத்து அம்சங்களை முழுமையாக ஆராய்ந்து செய்ய வேண்டும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சுவார்த்தையின்போது, கவனமாக இருங்கள். எந்த ஒரு நேரத்திலும் அவசரமாக சில முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். உடல்நலம் மற்றும் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்களும் மன அமைதியின்மையும் உண்டாகும்

மிதுனம் (Gemini Zodiac Sign)

ஷடாஷ்டக யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த சில உதவிகள் அலைச்சல்கள் பின்பு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வும் வெற்றியும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சில தடைகள் ஏற்படலாம். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் பிரச்னைகள் ஏற்படலாம். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி (Virgo Zodiac Sign)

ஷடாஷ்டக யோகத்தால்  கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்னைகள் ஏற்படலாம். கடன் தொல்லை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வர்த்தக தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  மறைமுக எதிர்ப்புகளைப் புரிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள்  அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுட்பமான விஷயங்களை புரிந்து செயல்பட வேண்டும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

ஷடாஷ்டக யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல் உண்டாகும். நிதி விஷயங்களில் கவனம் தேவை. அடிக்கடி பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. முழுமையாக தகவல்களை பெற்ற பின்னரே பண முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக் கவேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. நெருங்கியவர்களிடம் எந்த விஷயத்திலும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவசரமாக எந்த ஒரு பணிகளையும் செய்வதை தவிர்க்க வேண்டும். பணம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi