• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /புதன் வக்ர பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. அக்டோபர் முதல் பொற்காலம்

புதன் வக்ர பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. அக்டோபர் முதல் பொற்காலம்

Budh Vakra Peyarchi: புதன் துலாம் ராசியில் வக்ர நிலைக்கு செல்ல உள்ளார். அக்டோபர் மாதம் புதன் வக்ர பெயர்ச்சி அடைவது சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பாபர்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 30, 2026, 08:42 AM IST|Updated: Sep 30, 2026, 08:52 AM IST
joinshare
புதன் வக்ர பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. அக்டோபர் முதல் பொற்காலம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Budh Vakra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக புதன் அறியப்படுகிறார். புதன் பகவான் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். புதன் தற்போது துலாம் ராசியில் இருக்கிறார். புதன் பகவான் துலாம்  ராசியில் அக்டோபர் 26ஆம் தேதி வக்ர நிலைக்கு செல்ல உள்ளது.  புதனின் வக்ர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், சில ராசிகளுக்கு மட்டும் நேர்மறையான ஆற்றல் உண்டாகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

புதன் வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ச்சி, செல்வம் உண்டாகும். தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  மாறுபட்ட சிந்தனைகளால் புதுமைகள் ஏற்படும். குழப்பமான கனவுகளால் மன அமைதி குறையும். மற்றவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற சூழல்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறுதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும்.

கடகம் (Cancer Zodiac Sign)

புதன் வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெரும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். வேலையில் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். வருமானம் உயரக் கூடும். நிதி நிமை மேம்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். 

நினைத்த காரியங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். அரசுப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வாகன பயணங்களால் மேன்மை உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். சில அனுபவங்களால் தெளிவுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.

கும்பம் (Aquarius Zodiac Sign)

புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைவது கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். புதிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகளால் இருந்த தாமதம் விலகும். திடீர் வரவுகள் மூலம் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றம் ஏற்படும். துணைவர் பற்றிய புரிதல்கள் உண்டாகும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

புதன் வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு மேன்மை உண்டாகும்.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சு வன்மையின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.  குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கேளிக்கை செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi