Lakshmi Kubera Puja: இந்த நாளில் லட்சுமி குபேர பூஜை செய்து வழிபாடு சிறப்பானது என ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சுமி குபேர பூஜை அமாவாசயில் செய்ய வேடும். இந்த அமாவாசை தீபாவளி பண்டிகையுடன் சேர்ந்தே வருகிறது. தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதியும், நவம்பர் 9ஆம் தேதி அமாவாசை வருகிறது. ஆனால், லட்சுமி குபேர பூஜை மாலையில் செய்யப்படுகிறது. இதனால், தீபாவளி அன்று மாலை அமாவாசை திதி இருக்கும் சமயத்தில் பூஜை செய்ய வேண்டும். தீபாவளி அமாவாசை மாலை நேரத்தில் மகாலட்சுமியையும் செல்வத்தின் காவலராகப் போற்றப்படும் குபேரனையும் இணைத்து வழிபடுவது சிறந்தது என கருதப்படுகிறது. எனவே, வீட்டிலேயே எளிமையாக பூஜை செய்வது எப்படி, நல்ல நேரம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கங்கா ஸ்நானம் - நவம்பர் 8ஆம் தேதி மாலை 3.30 - 5.30 மணி
தீபாவளி பூஜை - நவம்பர் 8ஆம் தேதி காலை 7:45 – 8:45 மணி
சதுர்த்தசி விரதம் - நவம்பர் 8ஆம் தேதி காலை 10:30 – 11:30 மணி
கேதார கௌரி விரதம் - நவம்பர் 8ஆம் தேதி மாலை 3:15 – 4:15 மணி
லட்சுமி குபேர பூஜை - நவம்பர் 8ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அமாவாசை திதி தொடக்கம்: நவம்பர் 8ஆம் தேதி நண்பல் 12:00 மணி
அமாவாசை திதி முடிவு: நவம்பர 9ஆம் தேதி திங்கள்கிழமை மதியம் 12:45 மணி
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராட்டி, பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். அங்கு லட்சுமி குபேரர் படத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து மலர்களால் அலங்கரிக் கவேண்டும். லட்சுமி, குபேரர் படத்திற்கு மஞ்சள், குங்குமம் ஈட வேண்டும். லட்சுமி குபேர படத்திற்கு முன்பு, கோலம் போட வேண்டும். கோலத்தின் முன் கலசம் வைத்து, நிவேதனப்பொருட்கள் மற்றும் தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்திற்கு முன்பாக வைத்து வணங்க வேண்டும்.
குபேர யந்திர கோலத்தில் உள்ள கட்டத்தை குங்குமத்தாலும், எண்களை அரிசி மாவாலும் எழுதுவது சிறந்தது. திருமகளான லட்சுமியை குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள 'ஸ்ரீ" எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதை வரைந்த பிறகு கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வைக்க வேண்டும். பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாக சேர்த்து 81 நாணயங்கள் அவசியம்.
குபேர யந்திரத்தில் வைத்த நாணயங்களை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட்டுவிட வேண்டும். நைவேத்தியமாக வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல், வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்து படைக்கலாம். பூஜையின்போது ஓம் குபேராய நமஹ, ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ ஆகிய மந்திரங்களை சொல்லாம்.
லட்சுமி குபேர பூஜையின்போது, ஓம் குபேராய நமஹ, ஓம் தனபதியே நமஹ போன்ற மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்யலாம். தாமரை பூவின் ஒவ்வொரு இதழ்களாக எடுத்து, அதில் ஒரு நாணயத்தை வைத்து, அதன் மீது குங்குமம் வைத்து இந்த மந்திரங்களை சொல்லி குபேரனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நிறைய தாமரை மலர்கள் கிடைக்கவில்லை என்றால், ஒரே ஒரு தாமரை மலரை மட்டும் மகாலட்சுமி படத்திற்கு முன்பு வைத்து விட்டு, அர்ச்சனை மலர்களால் அர்ச்சனை செய்துவிட்டு, நாணயங்களை மட்டும் குபேரர் படத்திற்கு முன் அடுக்கி வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.