• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /அக்டோபர் 4-ல் கஜகேசரி ராஜயோகம்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்!

அக்டோபர் 4-ல் கஜகேசரி ராஜயோகம்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்!

அக்டோபர் 4-ம் தேதி உருவாகும் குரு-சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் ஏற்பட உள்ள நிலையில், துலாம், மகரம் மற்றும் கும்ப ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.

Written ByR Balaji
Published: Sep 25, 2026, 02:46 PM IST|Updated: Sep 25, 2026, 02:49 PM IST
joinshare
அக்டோபர் 4-ல் கஜகேசரி ராஜயோகம்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றங்கள் ராசிகளில் பலன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் சிறப்பான யோகம் ஒன்று உருவாக உள்ளது.

அக்டோப்ர் 4 ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைய உள்ளார். ஏற்கனவே இந்த ராசியில் குரு பகவான் சஞ்சரித்து வருவதால், குரு மற்றும் சந்திரன் ஒரே ராசியில் இணையும் நிலை உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த சேர்க்கை கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த யோகம் அக்டோபர் 6 ஆம் தேதி இரவு சுமார் 10:17 மணி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. அதன் பின்னர் சந்திரன் சிம்ம ராசிக்கு இடம்பெயர உள்ளார். குரு - சந்திர சேர்க்கையால் உருவாகும் இந்த யோகம் அறிவு, பொருளாதாரம், தொழில் மற்றும் சமூக அந்தஸ்து உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.  அந்த வகையில், கஜகேசரி ராஜயோக்த்தால் சாதகமான பலன்களை பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

துலாம் (Libra Zodiac Signs)

துலாம் ராசியினருக்கு 10 வது வீட்டில் குரு - சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணிகளை முடிக்கும் வாய்ப்பும் ஏற்படும். எந்த முயற்சியிலும் சாதகமான முடிவுகளை பெறுவதற்கான சூழல் உருவாகலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படலாம். அதே நேரத்தில் முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அவசரத்தை தவிப்பது நல்லது.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசிக்கு 7 வது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை ஏற்படுகிறது. இதனால் தொழில் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். இதன் மூலம் வருமானத்திற்கான புதிய வழிகளும் திறக்கப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை வாழ்க்கை துணையுடனான உறவு மேம்படும் சூழல் ஏற்படலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது துணையின் ஆதரம் கிடைக்கும்.

கும்பம் (Aquarius Zodiac Signs)

கும்ப ராசியின் 6 வது வீட்டில் குரு - சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதன் மூலம் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும் உருவாகலாம். மாணவர்களை பொறூத்தவரை தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இலக்கை அடைய விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். அதேபோல், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தினால் சாதகமான முடிவுகளை பெறலாம்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan