• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /குரு பெயர்ச்சி: அக்டோபர் முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம்... செல்வம் பெருகும்

குரு பெயர்ச்சி: அக்டோபர் முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம்... செல்வம் பெருகும்

Guru Peyarchi: அக்டோபர் மாதம் குரு பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். சிம்ம ராசியில் குரு பகவானின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நற்பலன்களை கொண்டு வரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 22, 2026, 08:39 IST|Updated: Sep 22, 2026, 08:49 IST
joinshare
குரு பெயர்ச்சி: அக்டோபர் முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம்... செல்வம் பெருகும்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Guru Peyarchi October: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பகவான் அறியப்படுகிறார். ருரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், குரு பகவான் அடுத்த மாதம் பெயர்ச்சி அடைய உள்ளார். அதாவது, குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். சிம்ம ராசியில் குரு பகவான் பெயர்ச்சி அடைவது சில ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

குரு பகவான் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை கொடுக்கும். மேஷ ராசியின் ஐந்தாம் வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். 

பிறமொழி மக்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும். துணைவர் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும்.

சிம்மம் (Gemini Zodiac Sign)

குரு பகவான் சிம்ம ராசியில் முதல் வீட்டிற்குள் பெயர்ச்சி அடைகிறார். இதனால், உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும்.  ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கூட்டணிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். 

தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் மறையும். உத்தியோகப் பணிகளில் மேன்மைக்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலையாட்களின் திறமைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் லாபங்கள் உருவாகும்.

தனுசு (Sagittarius Zodiac Sign)

குரு பகவானின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை கொண்டு வரம். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுவீர்கள். பொருளாதார நிலையில் மேன்மை ஏற்படும். பயணத்தால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உங்கள் பேச்சுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். 

பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வித்தியாசமான பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் காணப்படும். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். தொழில் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.

மீனம் (Pisces Zodiac Sign)

குரு பகவான் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணம் சாதகமாக அமையும். 

சில முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் காணப்படும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரிய செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi