• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சிம்மத்தில் கேது.. அடுத்த 90 நாட்கள் 4 ராசிகளுக்கு பொற்காலம்.. பணம் கொட்டும்

சிம்மத்தில் கேது.. அடுத்த 90 நாட்கள் 4 ராசிகளுக்கு பொற்காலம்.. பணம் கொட்டும்

Ketu Transit: சமீபத்தில் கேது பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்தார். அடுத்த 90 நாட்கள் அதே நிலையில் கேது பகவான் நிலைத்திருப்பார். இதனால், சில ராசிகளுக்கும் அர்ஷ்டம், செல்வம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 17, 2026, 08:36 IST|Updated: Sep 17, 2026, 08:44 IST
joinshare
சிம்மத்தில் கேது.. அடுத்த 90 நாட்கள் 4 ராசிகளுக்கு பொற்காலம்.. பணம் கொட்டும்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Ketu Transit: ஜோதிடத்தில் மிகவும்  அசுப கிரகமாக கருதப்படுவது ராகு, கேது. ராகு, கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு, கேது பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கேது, ராகு பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், கேது பகவான்  சமீபத்தில் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்தார். கேது அடுத்த 90 நாட்களுக்கு சிம்ம ராசியில் நிலைத்திருப்பார். சிம்ம ராசியில் நிலைத்திருப்பது, அடுத்த 90 நாட்களுக்கு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

கேது சிம்மத்தில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான ஆற்றல் உண்டாகும். தொழில் சார்ந்த கருவிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வாகன தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். மனதில் இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

கேது சிம்ம ராசியின் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். இதனால், சிம்ம ராசிக்காரர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில அங்கீகாரங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். 

மனைவி வழி உறவினர்களிடம் பொறுமையை கையாளவும். விவசாய பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வாகன விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம். புதுவிதமான காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் (Leo Zodiac Sign)

கேது சிம்ம ராசியில் இருப்பதால், அடுத்த 90 நாட்களுக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். பணி நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். எண்ணிய சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும்.

தனுசு (Sagittarius Zodiac Sign)

கேதுவின் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் நடக்கும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக பணிகளில் நல்ல பெயர்கள் கிடைக்கும். தன வரவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிக்கலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தைரியம் பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi