ஜோதிட கிரகங்களின் இயக்கமும், அவற்றின் சேர்க்கையும் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், செப்டம்பர் மாதத்தின் இறுதியில் ஒரு முக்கியமான கிரக சேர்க்கை நிகழவிருக்கிறது.
அதாவது செப்டம்பர் 27 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். அந்த நேரத்தில் புதன் ஏற்கனவே துலாம் ராசியில் சஞ்சரித்து வருவதால், அங்கு இரு கிரகங்களும் ஒன்றிணைகின்றன. புதன் - சுக்கிரனின் இந்த சேர்க்கை ஜோதிடத்தில் லட்சுமி நாராயண ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது.
புதன் அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வணிகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாக கருதப்படுகிறார். அதேபோல், சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல், வசதி மற்றும் செழிப்பின் காரணியாக பார்க்கப்படுகிறார். எனவே இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம் பணம், தொழில், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரக்கூடும்.
இந்த யோகத்தின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இதன் பலன் கூடுதல் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. அப்படி அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கலாம். குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில பணிகள் மீண்டும் வேகமெடுத்து வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஊடகம் மற்றும் ஐடி துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பானதாக அமையலாம்.
சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் சஞ்சரிக்கும்போது புதனுடன் இணைவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகி, காரியங்கள் சாதகமாக முடிய வாய்ப்புள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு தொடர்புகளுடன் தொழில், செய்ப்வர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலும், பணம் தொடர்புடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து நிதி நிலை மேம்படும் வாய்ப்பு உள்ளது. தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடிய காலமாகவும் இது அமையலாம்.
தனுசு ராசிககரர்களுக்கு இந்த ராஜயோகம் வருமானத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக வேலை தேடி வருபவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும் சூழல் உருவாகலாம். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இதுவரை இருந்த சில நிதி நெருக்கடிகளும் குறையலாம். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கலாம். குறிப்பாக ஆடம்பர பொருட்கள் மற்றும் வசதிகளுக்காக பணம் செலவிடும் சூழல் ஏற்படலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் இறுதியில் உருவாகும் இந்த ராஜயோகம் சாதகமான மாற்றங்களை கொண்டு வரக்கூடும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும் காலமாக இது அமைய வாய்ப்புள்ளது. ஊடகம், மார்க்கெட்டிங் மற்றும் கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். திறமையை வெளிப்படுவத்துவற்கான சந்தர்ப்பங்களும் உருவாகலாம். இதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், கூடுதல் வருமானத்திற்கான வழிகளும் திறக்கப்படலாம். தொழில் செய்ப்வர்களுக்கு புதிய முயற்சிகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கலாம். வாழ்க்கை துணையுடன் புரிதல் மேம்பட்டு, உறவு மேலும் இனிமையாகும் சூழல் உருவாகலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)