• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும்!

செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும்!

செப்டம்பர் 18 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு நவம்பர் 12 ஆம் தேதி வரை இருப்பார். இந்த காலகட்டத்தில் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் யார் யார்? என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Written ByR Balaji
Published: Sep 13, 2026, 12:29 PM IST|Updated: Sep 13, 2026, 12:31 PM IST
joinshare
செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நவகிரகங்களில் செவ்வாய் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். தைரியம், துணிச்சல், வீரம் மற்றும் வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை மாதம் அதாவது 45 நாட்கள் வரை நீடிக்கக்கூடியவர்.

தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி சந்திரனின் ஆளுமை நிறைந்த கடக ராசிக்குள் நுழைய உள்ளார். இந்த ராசியில் செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி வரை சஞ்சரிக்கிறார். ஜோதிட சாஸ்த்திரத்தின்படி கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெறுவதாக கூறப்படுகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் தன்மைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்பதால், இந்த பெயர்ச்சி பல்வேறு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசியினருக்கு வேலை, பணம், குடும்பம் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழல் உள்ளது. அப்படி செவ்வாய் கடக ராசிக்கு பெயர்ச்சியாகும்போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து பார்க்கலாம்.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக இந்த ராசியினர் இக்காலகட்டத்தில் தங்கள் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணியிடத்தில் எதிரிகளால் சில இடையூறுகளை சந்திக்க நேரிடலாம். மேற்கொள்ளும் பணிகளை திட்டமிடபடி முடிப்பதில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மன அழுத்தமும் அதிகரிக்கக்கூடும். உடல்நலத்தை பொறுத்தவரை அலட்சியமாக இருக்காமல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் பணம் தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, வழக்கத்தை விட அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

துலாம் (Libra Zodiac Signs)

துலாம் ராசியின் 10 ஆம் வீட்டில் செவ்வாய் பயணிக்க உள்ளார். இதனால் தொழில் மற்றும் பணியிடம் தொடர்பான விஷயங்களில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்அடலாம். பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக கூட்டாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த காலகட்டத்தில் அது தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்காமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க பிறகே முடிவு எடுக்க வேண்டும். அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் பின்னர் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். குடும்ப வாழ்க்கையிலும் சில கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். குறிப்பாக திருமணமான தம்பதிகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவது அவசியம்.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசியின் 7 ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சற்று சவாலானதாக இருக்கலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் மனதில் குழப்பம் ஏற்படலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதும் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவதும் முக்கியம். யாருடனும் தேவையற்ற வாக்குவாதம் அல்லது மோதலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சிறிய பிரச்சனையே பெரிய அளவில் சென்று சட்டரீதியான சிக்கல்களைக் கூட ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan