• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. வீடு,வாகனம் வாங்க யோகம்!

செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. வீடு,வாகனம் வாங்க யோகம்!

செப்டம்பர் 18ல் நிகழ்ந்த செவ்வாய் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

Written ByR Balaji
Published: Sep 19, 2026, 10:53 AM IST|Updated: Sep 19, 2026, 10:58 AM IST
joinshare
செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. வீடு,வாகனம் வாங்க யோகம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரியம், ஆற்றல் மற்றும் துணிச்சலை குறிக்கும் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகிறது. மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய், பொதுவாக சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி நிலையை மாற்றுகிறார். ஒவ்வொரு பெயர்ச்சியும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில், செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி கடக ராசியில் பெயர்ச்சி ஆகி உள்ளார். கடக ராசியின் அதிபதி சந்திரன் என்பதுடன் இந்த ராசியில் செவ்வாய் நீச்ச நிலையை அடைவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடகத்தில் குரு பகவானின் நிலையும் இருப்பதால், இரு கிரகங்களின் சேர்க்கை உருவாகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியான பலன்கள் ஏற்படலாம்.

இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஒரே மாதிரியான பலன்களை வழங்காது. சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் ஏற்படக்கூடிய நிலையில், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சொத்து, வீடு மற்றும் வாகனம் தொடர்பான விஷயங்களில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு புதிய சொத்துகளை வாங்கும் சூழல் உருவாகும்.

மேஷம் (Aries Zodiac signs)

மேஷ ராசியினருக்கு செவ்வாய் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது வீடு, நிலம், வாகனம் உள்ளிட்ட சொத்து சார்ந்த விஷயங்களுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் சொத்து சம்பந்தமான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட கால திட்டம் வைத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையலாம். வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகளும் உருவாககூடும். தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சூழல் உருவாகலாம். குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு சில எதிர்பாராத நிதி வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Signs)

விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகலாம். வேலை அல்லது தொழில் காரனமாக தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் நிதி ஆதாயங்களும் கிடைக்கக்கூடும்.

சிலருக்கு சொந்தமாக வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் பரம்பரை சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். அதன் மூலம் எதிர்பாராத வகையில் நிதி அல்லது சொத்து சார்ந்த பலன்களும் கிடைக்கா வாய்ப்புள்ளது.

தனுசு (Sagittarius Zodiac Signs)

தனுசு ராசியினருக்கு செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக பரம்பரை சொத்து தொடர்பாக நீண்ட காலமாக நில்லுவையில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் சூழல் உருவாகலாம். சிலருக்கு மூதாதையர்களின் சொத்து  கைக்கு வந்து சேரும் வாய்ப்பும் இருக்கிறது. இதன் மூலம் நிதி நிலை மேம்படக்கூடும். மேலும், எதிர்பாராத வழிகளில் இருந்து பணவரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.

இருப்பினும் பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக நிலம் அல்லது சொத்து வாங்கும்போது ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து சட்ட ரீதியான விஷயங்களை உறுதி செய்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan