• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /செவ்வாய் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

செவ்வாய் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

நவம்பர் 12 அன்று நிகழவுள்ள செவ்வாய் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.

Written ByR Balaji
Published: Oct 02, 2026, 03:59 PM IST|Updated: Oct 02, 2026, 04:05 PM IST
joinshare
செவ்வாய் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பொதுமக்களுக்கு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி: கங்கா மருத்துவமனை அறிவிப்பு!

பொதுமக்களுக்கு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி: கங்கா மருத்துவமனை அறிவிப்பு!

2

ICC புதிய விதிகள்: ஓடிஐ, டி20ஐ, டெஸ்ட் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்? Explained

3

EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

4

சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, நவகிரகங்களின் பெயர்ச்சிகள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில்,வீரியம், தைரியம், தன்னம்பிக்கை, நிலை, வீடு மற்றும் சொத்து ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கிரக கருதப்படுகிறது. செவ்வாயின் ராசி மாற்றம் ஒருவரின் தொழில், பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் தாக்கத்தை ஏறபடுத்தும்.

அந்த வகையில், 2026 நவம்பர் 12 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளது. இந்த பெயர்ச்சியின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள், வியாபாரத்தில் முன்னேற்றம், வருமான உயர்வு போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கலாம். அப்படி சிறப்பான பலன்களை பெறக்கூடிய 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் காலமாக இருக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். பணியிடத்தில் உங்களுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதற்கான சூழலும் அமையலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும், தொழிலை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். இதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் உருவாகலாம். உங்களுடைய தன்னம்பிக்கையும் முடிவெடுக்கும் திறனும் புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை, வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைப்பதால் முக்கியமான முடிவுகளை எடுப்பது எளிதாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது திட்டமிட்டு செயல்படுவது அவசியம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சி பல்வேறு மாற்றங்களை கொண்டு வரக்கூடும். குறிப்பாக தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்களுடைய நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் உங்களுடைய செயல்பாடுகள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம். இதனால் புதிய பொறுப்புகள் அல்லது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரம் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கும், தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் முயற்சி செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படலாம். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உருவாகும் வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு துணையை தேடுபவர்களுக்கு புதிய அறிமுகங்கள் கிடைக்கலாம். காதல் உறவிலும் நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மேலும், வீடு அல்லது நிலம் வாங்குவது தொடர்பான திட்டங்களை முன்னெடுப்பதற்கான சூழலும் உருவாகலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். நீண்ட காலமாகத் தாமதமாகி வந்த பணவரவு தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நிலுவையில் உள்ள தொகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டுத் தொழில் முயற்சிகள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவக்கூடும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பதற்கான சூழல் அமையலாம். மாணவர்களை பொறுத்தவரை, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், வெளிநாட்டுப் பயணம் அல்லது வெளியூருக்கு சென்று பணியாற்றுவது தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையக்கூடும். வாகனம் அல்லது சொத்து வாங்கும் திட்டங்களையும் பரிசீலிக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தச் செவ்வாய் பெயர்ச்சி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான உத்வேகத்தை அளிக்கக்கூடும். இதுவரை பல்வேறு தடைகளைச் சந்தித்து வந்தவர்கள், தங்களுடைய இலக்குகளை நோக்கி மீண்டும் உற்சாகத்துடன் செயல்படத் தொடங்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலை விரிவுபடுத்துவது அல்லது புதிய துறையில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்களை வகுக்கலாம். அதே நேரத்தில், முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்பு நிதி நிலைமையை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள் தங்களுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, உறவுகளிடையே புரிதல் அதிகரிப்பதற்கான சூழலும் உருவாகலாம்.

பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan