• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனம்.. பணம், வேலை, ஆரோக்கியத்தில் சிக்கல்?

புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனம்.. பணம், வேலை, ஆரோக்கியத்தில் சிக்கல்?

புதன் சித்திரை நட்சத்திரத்தில் நுழைந்துள்ள நிலையில், 3 ராசிக்காரர்கள் பணம், வேலை மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

Written ByR Balaji
Published: Sep 23, 2026, 11:04 IST|Updated: Sep 23, 2026, 11:06 IST
joinshare
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனம்.. பணம், வேலை, ஆரோக்கியத்தில் சிக்கல்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் நிலை மாற்றங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், புத்திசாலித்தனம், கல்வி, பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்திற்கு காரணியாக கருதப்படும் புதன், குறுகிய கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றக்கூடிய கிரகமாக பார்க்கப்படுகிறது.

தற்போது புதன் தனது சொந்த வீடான கன்னி ராசியில் சஞ்சரித்து வருகிறார். இதனிடையே செப்டம்பர் 21 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்ட சித்திரையில் புதன் அக்டோபர் 1 ஆம் தேதி வரை பயணிக்க உள்ளார். புதனின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட சில ராசியினர் இந்த காலகட்டத்தில் கூடுதல் கவனதுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக கன்னி, மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கன்னி (Virgo Zodiac Signs)

கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர மாற்றம் சில விஷயங்களில் சவால்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்படாமல் இருப்பது அவசியம். நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பேச்சில் கவனம் தேவை. உடல்நலத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது, சிறிய பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் இருப்ப்வர்களுக்கு ஏற்ற இறக்கமான சூழல் நிலவலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியும்.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உடல்நலனின் அதிக அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக தலைவலி மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் உடல்நலத்தை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது முக்கியம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். யாருக்கும் கடனாக பணம் கொடுப்பதில் கவனம் தேவை. கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படகூடும். அதேபோல் பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்ப்பது நல்லது.

மீனம் (Pisces Zodiac Signs)

மீன ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர மாற்றம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சவால்களை உருவாக்கலாம். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், பணிகளை கவனமாக கையாள வேண்டும். இந்த காலகட்டத்தில் கவனக்குறைவு மற்றும் அவசர முடிவுகளை தவிர்ப்பது அவசியம். காதல் திருமணம் தொடர்பாக சில தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்படக்கூடும். பணவரவை அதிகரிக்க கூடுதல் முயற்சி செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். எனினும் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தொழில் சார்ந்த விஷயங்களில் புதனின் தாக்கம் சில சிரமங்களை ஏற்படுத்தலாம். புதிதாக உருவாகும் நட்புகள் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தாத வகையில் கவனமாக பழகுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan