October 6 Rasipalan: அக்டோபர் மாதம் 6ஆம் தேதி (புரட்டாசி 19) நாளான இன்று பஞ்சாங்கத்தின்படி, அபிஜித் காலம் காலை 11.44 - 12.31 வரையும், அமிர்த காலம் இரவு 8.44 - 10.16 வரையும், பிரம்ம முகூர்த்தம் காலை 4.34 - 5.22 வரையும் இருக்கிறது. அதே நேரத்தில் அசுப காலமாக ராகு மாலை 3.06 - 4.35, எமகண்டம் காலை 9.09 - 10.38, குளிகை பகல் 12.07 - 1.37 வரையும் உள்ளது. இந்த நிலையில், இன்று நாளுக்கான 12 ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம்.
சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தந்தை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். ஓட்டுநர் துறைகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறையும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி: முன்னேற்றமான நாள்.
பரணி : இன்னல்கள் குறையும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நில நிறம்
கிருத்திகை : ஆதரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : தேவைகள் பூர்த்தியாகும்
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : குழப்பங்கள் விலகும்.
திருவாதிரை : முதலீடுகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : வரவுகள் உண்டாகும்.
புதிய வேலைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். எதிலும் தற்பெருமை இன்றி செயல்பட்டால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்
விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். சுதந்திர மனப்பான்மையும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : எண்ணம் மேம்படும்.
பூரம் : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.
சித்திரை : இலாபகரமான நாள்.
தொழில் தொடர்பான புதிய பயணங்கள் மற்றும் அனுபவங்கள் ஏற்படும். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். வரவுகளில் இருந்த தாமதம் மறையும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் காணப்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சலும் விரயமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
சித்திரை : அனுபவங்கள் ஏற்படும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : விரயம் உண்டாகும்.
வழக்கு பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வரவு தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் பணிகளில் அவசரமின்றி செயல்படுதல் மூலம் நன்மதிப்பு உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
அனுஷம் : குழப்பமான நாள்.
கேட்டை : மதிப்புகள் உண்டாகும்
காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : வரவுகள் ஏற்படும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் பிறக்கும். எந்த ஒரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளை தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாலின மக்கள் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், உதவிகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவோணம் : இலாபம் மேம்படும்.
அவிட்டம் : நம்பிக்கை பிறக்கும்.
நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். முதுநிலை கல்வி விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். இயந்திர பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் காணப்படும். தீர்க்கமான சிந்தனைகள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : புத்துணர்ச்சியான நாள்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)