• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /அக்டோபர் மாதம் 4 ராசிகளுக்கு பணமழை.. தொழில், வேலை, பணவரவில் முன்னேற்றம்!

அக்டோபர் மாதம் 4 ராசிகளுக்கு பணமழை.. தொழில், வேலை, பணவரவில் முன்னேற்றம்!

October Month Rasi Palan: அக்டோபர் மாதத்தில் மேஷம், கடகம் உள்ளிட்ட 4 ராசியினருக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

Written ByR Balaji
Published: Sep 30, 2026, 04:11 PM IST|Updated: Sep 30, 2026, 04:14 PM IST
joinshare
அக்டோபர் மாதம் 4 ராசிகளுக்கு பணமழை.. தொழில், வேலை, பணவரவில் முன்னேற்றம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

3

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

4

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

5

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

அக்டோபர் மாதம் நவராத்திரி, விஜயதசமி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை கொண்டதாக உள்ளது. ஜோதிட ரீதியாக இந்த மாதத்தில் சில ராசியினருக்கு பணவரவு அதிகரிப்பது தொழிலில் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைப்பது, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற சாதகமான பலன்கள் ஏற்படலாம்.

குறிப்பாக நீண்ட நாட்களாக பணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி வருவதற்கான சூழல் சில ராசிகளுக்கு அமையலாம்.

மேஷம் (Aries Zodiac Signs)

அக்டோபர் மாதம் மேஷ ராசியினருக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் தரக்கூடிய காலமாக இருக்கலாம். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணம் இந்த காலகட்டத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் உங்களின் திறமை மற்றும் செயல்பாடுகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம். முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், புதிய பணிகளையும் மேற்கொள்ளும் சூழல் ஏற்படலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான வாடிக்கையாளர்கள் மூலமாக மீண்டும் வருமான கிடைக்க வாய்ப்பு உள்ளது. நவராத்திரி காலத்தில் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம். சில செலவுகள் ஏற்பட்டாலும் அவை குடும்பத்திற்கு தேவையான விஷயங்களுக்காக இருக்கும்.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசியினருக்கு அக்டோபர் மாதம் நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாக அமையலாம். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் அல்லது தாமதமாகி வந்த தொகை தொடர்பாக நல்ல தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம். சிலருக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படுவதுடன், பதவி சார்ந்த முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாதவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய நபர்களுடனான தொடர்புகள் தொழிலுக்கு சாதகமாக அமையலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான முக்கிய பேச்சுகள் நடைபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

துலாம் (Libra Zodiac Signs)

துலாம் ராசியினருக்கு அக்டோபர் மாதம் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்கலாம். குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல் காணப்படலாம். வேலை தேடி வருபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு தொடர்பான தகவல் கிடைக்கலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைப்பதுடன், முக்கியமான திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பும் அமையலாம். தொழில் செய்து வருபவர்கள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து திட்டமிடலாம். புதிய வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நவராத்திரி காலத்தில் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வழிபடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கலாம்.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசியினருக்கு அக்டோபர் மாதம் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய காலமாக இருக்கலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை படிப்படியாக குறைக்க முடியும். வேலை செய்பவர்களுக்கு தொடர்ந்து முன்னேற்றம் கிடைக்கலாம்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், பதவி மாற்றம் தொடர்பான பேச்சுகளும் நடைபெறலாம். தொழில் செய்து வருபவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய முதலீடுகளை அவசரமாக மேற்கொள்வதை தவிர்த்து, ஏற்கனவே உள்ள தொழிலை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan