SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பழனி கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் எப்போது துவங்கும்? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Palani Murugan Temple: பழனி தண்டாயுதபாணி சாமி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 05, 2026, 14:19 IST | Updated: Sep 05, 2026, 14:40 IST
Join

Palani Murugan Temple:  தமிழகம் முழுவதும் முருகப்பெருமானுக்கு அறுபடை கோயில்கள் உள்ளன. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாக பழனி தண்டாயுதபாணி கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்ள் தரிசனம் செய்வார்கள். குறிப்பாக, விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானைப்பாதை உள்ளிட்ட வழிகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும், ரோப் கார் சேவையும் கோயிர் நிர்வாகம் வழங்கி வருகிறது.

பழனி முருகன் கோயில்

ரோப் கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலை உச்சிப் பகுதியை குறுகிய நேரத்தில் சென்றடைய முடியும். மலைப்பாதையில் நடந்து செல்ல முடியாத பக்தர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ரூ.15 மற்றும் ரூ. 50 கட்டணத்தில் ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரோப் கார் சேவையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  மாதத்திற்கு ஒருமுறையும், வருடத்திற்கு 45 நாட்கள் ரோப் கார் சேவையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: நவம்பரில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்

இந்த பணிகளின்போது ரோப் கார் சேவை இயங்காது. தற்போது வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழனி முருகன் கோயில் எப்போது மீண்டும் ரோப் கார் சேவை துவங்கப்படும் என்பது குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரோப் கார் சேவை மீண்டும் எப்போது துவக்கம்?

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) வெங்கடேசன் கூறுகையில், "பழனி முருகன் கோயிலில் இந்த ஆண்டிற்கான வருடாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய ஷாப்டுகள் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய ஷாப்டுகள் பழனிக்கு வரவழைக்கப்பட்டு, சென்னை ஐ.ஐ.டி வல்லுநர் குழுவினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

​இன்று அல்லது நாளைக்குள் இந்த புதிய ஷாப்டுகள் பொருத்தப்பட்டு, கரூரில் இருந்து வரவழைக்கப்படும். புதிய பெட்டிகள் மற்றும் புதிய கம்பி வடம் மாற்றப்பட்டு, எடைக்கற்கள் மூலம் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. மெக்கானிக்கல் பராமரிப்பு பணிகளோடு மட்டுமின்றி, பக்தர்கள் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் ரோப் கார் நிலையத்திலும் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ரோப் கார்மையப் பகுதி முழுவதும் நவீன எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய பால் சீலிங் அமைக்கும் பணிகளும், நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிகளும் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
​
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தவுடன் ஐ.ஐ.டி வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் ரோப் கார் சேவை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்” என கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) வெங்கடேசன் தெரிவித்துள்ளார். எனவே, வருகிறத செப்டம்பர் 12ஆம் தேதி முதல் மீண்டும் பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை துவங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: பக்தர்களே அலர்ட்! நாளை முதல் கோயில்களில் கட்டுப்பாடுகள் அமல்.. செல்போனுக்கு தடை
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES