ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ராகு, ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் தன்மை கொண்டது. பொதுவாக ஒரு ராசியில் சுமார் 18 மாவதங்கள் வரை இருக்கும் ராகு, அவ்வப்போது தனது நட்சத்திர நிலையையும் மாற்றி கொள்கிறது. இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
தற்போது ராகு கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரல் பயணித்து வருகிறார். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் கருத்தப்படுகிறார். செல்வம், வளர்ச்சி, வெற்றி உள்ளிட்டவற்றுடன் இந்த நட்சத்திரம் தொடர்புபடுத்தப்படுகிறது.
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகுவின் சஞ்சாரம் வரும் 2027 ஏப்ரல் 10ம் தேதி வரை தொடரும். இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்ப்ட வாய்ப்புள்ளது. குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சிறந்ததாக இருக்கலாம்.
மிதுனம்
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகுவின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகைகளில் சாதகமான பலன்களை வழங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த சில விஷயங்கள் இந்த காலத்தில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். தொடங்கும் பணிகளில் வெற்றி கிடைக்கக்கூடும். நீண்ட காலமாக முடிவுக்கு வராமல் இருந்த வேலைகள் ஒவ்வொன்றாக பிறருக்கு கடனாக கொடுத்திருந்த பணம் மீண்டும் கைக்கு வருவதற்கான சூழலும் உருவாகலாம்.
குடும்பத்தில் நிலவி வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். நீண்ட நாட்களாக தொடரும் சட்டம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும் சூழலும் உருவாகலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கும் ராகுவின் அவிட்டம் நட்சத்திர சஞ்சாரம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கலாம். குறிப்பாக, நண்பர்கள் அல்லது நெருங்கியவர்களின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்கக்கூடும். முதலீடு தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் படிப்படியாக குறையலாம்.
புத்திசாலித்தனத்துடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் கடினமான பணிகளையும் சிறப்பாக முடிக்க முடியும். வேலை பார்க்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் திறமை வெளிப்படும் சூழல் உருவாகலாம். இதன் காரணமாக கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதுடன் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் ஏற்படலாம்.
கும்பம்
ராகு தற்போது கும்ப ராசியிலேயே சஞ்சரிப்பதால் அவிட்டம் நட்சத்திர பயணம் கும்ப ராசிக்காரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வரும் 2027 ஏப்ரல் 10 வரை இந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கலாம். குடும்ப உறவுகளில் நெருக்கமும் அன்பும் அதிகரிக்கக்கூடும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். திறமைக்கு ஏற்ற புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதன் மூலம் பணியில் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். நீண்ட காலமாக இருந்து வந்த கில உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் சார்ந்த விஷயங்களிலும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாககூடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)