• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /மகாலட்சுமி ராஜயோகம்: செவ்வாய் - சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

மகாலட்சுமி ராஜயோகம்: செவ்வாய் - சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

செப்டம்பர் 05 ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால், 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர்.

Written ByR Balaji
Published: Aug 28, 2026, 11:36 IST|Updated: Aug 28, 2026, 11:41 IST
joinshare
மகாலட்சுமி ராஜயோகம்: செவ்வாய் - சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிட சாஸ்த்திரன்படி, நவகிரகங்களின் ராசி, நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேசமயம் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகங்களாலும் ராசிக்காரர்கள் பலன் பெறுகின்றனர். கிரக சேர்க்கையானது ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நகர்வுகளை பொறுத்து நடக்கும்.

அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் கிரக சேர்க்கையால் பல யோகங்கள் உருவாகின்றன. குறிப்பாக மங்களகரமான யோகமாக பார்க்கப்படும் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக உள்ளது. அதாவது, செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் இந்த யோகம் உருவாக உள்ளது.

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மிதுன ராசியில் உள்ளார். இந்த நிலையில், செப்டம்பர் 5ம் தேதி சந்திரன் குறிப்பிட்ட ராசிக்குள் நுழைந்து செவ்வாயுடன் இணைவதால் இந்த ராஜயோகம் உருவாகிறது. தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி வரை இதன் தாக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளும் ஓரளவு பலன்களைப் பெற்றாலும், 5 ராசிக்காரர்களுக்கு குறிப்பாக பணம், வேலை, தொழில் மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.

அந்த வகையில், மகாலட்சுமி ராஜயோகத்தின் மூலம் செப்டம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம் (Aries Zodiac Signs)

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் 3வது வீட்டில் அமைய உள்ளது. இதன் காரணமாக முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் இதுவரை எதிர்பார்த்து கொண்டிருந்த புதிய பொறுப்புகள் அல்லது முக்கியமான பணிகள் கிடைக்கக்கூடும்.

தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக வணிகத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறக்கூடிய சூழல் அமையலாம். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. பொருளாதார நிலை சீராகி, எதிர்கால தேவைகளுக்காக பணத்தை சேமிக்க முடியும்.

மிதுனம் (Gemini Zodiac Signs)

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியான முதல் வீட்டிலேயே மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கை முதல் தொழில் வரை பல்வேறு பகுதிகளில் நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம் அல்லது கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வருமான வாய்ப்புகள் உருவாகி லாபம் அதிகரிக்கலாம்.

நீண்ட காலமாக இருந்து வரும் சில பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பணவரவு அதிகரிப்பதுடன், எதிர்பாராத சில வழிகளிலும் பணம் கிடைக்கும் சூழல் உருவாகலாம். இதனால் நிதி நிலை முன்பை விட வலுப்பெற வாய்ப்புள்ளது.

துலாம் (Libra Zodiac Signs)

துலாம் ராசிக்கு 9வது வீட்டில் இந்த ராஜயோகம் ஏற்பட உள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைத்து, எதிர்பாராத வகையில் சில நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். முதலீடு செய்துள்ளவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணவரவு தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பான முன்னேற்றத்தை அடையக்கூடும்.

மேலும், பூர்வீக சொத்து தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் குறையும். வேலை மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரலாம்.

கன்னி (Virgo Zodiac Signs)

கன்னி ராசிக்காரர்களுக்கு 10வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் அமைகிறது. இதனால் தொழில் மற்றும் வாழ்க்கை தொடர்பான முக்கியமான இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த வீடு அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. தொழில் செய்து வருபவர்கள் தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வாய்ப்பை பெறலாம்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து, கவனம் மேம்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலையும் மேம்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறைந்து, முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க முடியும்.

கும்பம் (Aquarius Zodiac Signs)

கும்ப ராசிக்காரர்களுக்கு 5வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பணம் தொடர்பான சிக்கல்களில் இருந்து படிப்படியாக விடுபட வாய்ப்பு கிடைக்கும். நிறைவேறாமல் இருந்த சில முக்கியமான ஆசைகள் கைகூடலாம். வருமானத்தை பெருக்குவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்ததை விட சிறந்த லாபம் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன்-மனைவி இடையேயான புரிதலும் அன்பும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan