• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சொந்த நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி.. அக்டோபர் முதல் 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை

சொந்த நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி.. அக்டோபர் முதல் 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை

Shani Nakshatra Peyarchi: அக்டோபர் மாதம் சனி பகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். சனி பகவானின் பெயர்ச்சி 4 ராசிகளுககும் நன்மைகளை கொண்டு வரும். எனவே, எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 15, 2026, 08:36 AM IST|Updated: Sep 15, 2026, 08:43 AM IST
joinshare
சொந்த நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி.. அக்டோபர் முதல் 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shani Nakshatra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சனி பகவான் அறியப்படுகிறார். சனி பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் தற்போது மீன ராசியில் உள்ளார். அந்த வகையில், சனி பகவான் அக்டோபர் மாதத்தில் சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். அதாவது, சனி பகவான் அக்டோபர் 9ஆம் தேதி உத்திரட்டாதி  நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். 

அக்டோபர் 9ஆம் தேதி இரவு 7.28 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். பிப்ரவரி 8ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் சனி பகவான் இருப்பார். சனி பகவான் சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவது, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் சிலையை எந்த நாளில் கரைக்கலாம்? முழு விவரம்

ரிஷபம் (Tarus Zodiac Sign)

சனி நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும்.  சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்.  உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். கால்நடை வளர்ப்பு பற்றிய சிந்தனைகள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயத் துறைகளில் மேன்மை ஏற்படும். முயற்சிகளில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும்.

துலாம் (Libra Zodiac Sign)

சனி நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கவனம் வேண்டும். 

வெளி உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்கால  சிந்தனைகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க: செப்டம்பர் 18ல் செவ்வாய் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!

கும்பம் (Aquarius Zodiac Sign)

சனி நட்சத்திர பெயர்ச்சியால் புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். போட்டி தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் மூலம் அமைதியின்மை ஏற்படும்.

வர்த்தக தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் லாபங்கள் உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்கள் மூலம் சேமிப்புகள் மேம்படும். சேமிப்பு விசயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மைகள் வெளிப்படும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

சனி நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி ஆதரவுகள் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் வசூலாகும். நண்பர்கள் அரவணைத்து செல்வார்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் குறையும். வாழ்க்கை துணைவரை பற்றிய புரிதல்கள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க: திருப்பதி பக்தர்களே.. டிசம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi