• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சனியின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

சனியின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

Shani Peyarchi: சனி பகவான் அக்டோபரில் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 9ஆம் தேதி வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 28, 2026, 09:00 AM IST|Updated: Sep 28, 2026, 09:01 AM IST
joinshare
சனியின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shani Peyarchi: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக அறியப்படுகிறார். சனி பகவான் 18 மாதங்களுக்கு ஒருமமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவானின் பெயர்ச்சி நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும். ராசி மட்டுமின்றி, நட்சத்திர பெயர்ச்சியும் சனி பகவான் அடைகிறார். 

அந்த வகையில், சனி பகவான் அக்டோபர் 9ஆம் தேதி வக்ர நிலையில் உத்திரட்டாதி நட்சத்தித்திற்குள் நுழைய உள்ளார். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் பிப்ரவரி 8ஆம் தேதி இருக்கப்போகிறார். அக்டோபரில் நடக்கும் இந்த சனி நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, 3 ராசிகளுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, எந்தெந்த ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். நிதி ஆதாயங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.  முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பணி புரியும் இடத்தில் அசதிகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் இன்றி செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் இன்னல்களை தவிர்க்க முடியும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். பிறமொழி மக்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும். துணைவர் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு வெற்றிகளை அள்ளித்தரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும். 

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாலின மக்களுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உருவாகும். சேமிப்பு செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும்.

கும்பம் (Aquarius Zodiac Sign)

சனியின் நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் செல்வம் பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்களில் நிபுணத்துவம் வெளிப்படும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய செயல்களில் அலைச்சல் உண்டாகும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். உணவு துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi