• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன்.. அக்டோபர் வரை 4 ராசிகளுக்கு ராஜயோகம்

ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன்.. அக்டோபர் வரை 4 ராசிகளுக்கு ராஜயோகம்

Shukra Peyarchi: சுக்கிரன் பகவான் ஸ்வாதி நட்சத்திரத்தில் பயணித்து வருவது அக்டோபர் மாதம் வரை 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 23, 2026, 03:22 PM IST|Updated: Sep 23, 2026, 03:34 PM IST
joinshare
ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன்.. அக்டோபர் வரை 4 ராசிகளுக்கு ராஜயோகம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shukra Peyarchi: ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் பகவான் அறியப்படுகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி  அடைவார். இதற்கிடையில், நட்சத்திர பெயர்ச்சியும் அடைவார். அந்த வகையில்,  செப்டம்பர் 11ஆம் தேதி ராகுவின் நட்சத்ரிமான சுவாமி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்தார். சுக்கிரன் அக்டோபர் 23ஆம் தேதி  இரவு வரை ஸ்வாதி நட்சத்திரத்தில் தொடர்வார். இதனால், 4 ராசிகளுக்கு ன்மை உண்டாகும. எனவே, அவை எனனென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

கடகம் (Cancer Zodiac Sign)

சுக்கிரன் ஸ்வாதி நட்சத்திரத்தில் இருப்பது கடக ராசிக்காரர்களுக்கு செல்வம் உண்டாகும். பணியிடத்தில் உங்களுக்கு இருந்து வந்த மரியாதை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். சிறுசிறு பிரச்னைகள் தீரும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலை காணப்படும். வர்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். மனதில் இருந்து கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புது விதமான சிந்தனைகள் மேம்படும்.

துலாம் (Libra Zodiac Sign)

துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். கூட்டாளிகளிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் மறையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். 

தொழில் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வியாபார நிமித்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும்.

கும்பம் (Aquarius Zodiac Sign)

கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும்.  நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் காணப்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயண செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களையும் வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்வது நல்லது.

கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர் வகையில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi