Malavya Rajyoga On September: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிர பகவான் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சுப கிரகமாக கருதப்படும் சுக்கிரன், செப்டம்பர் 2ஆம் தேதி புதன்கிழமை மதியம் 1.44 மணிக்கு தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார்.
இவர் நவம்பர் 6ஆம் தேதி வரை துலாம் ராசியில் நிலைத்திருப்பார். சுக்கிரன் பெயர்ச்சியால் செப்டம்பர் 2ஆம் தேதி மால்வியா ராஜ யோகம் உருவாக்குகிறார். இது பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும். சுக்கிரன் துலாம் ராசியில் பெயர்ச்சி, மால்வியா ராஜ யோகம் உருவாகுவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் உண்டாகும்.
சுக்கிரன் தங்களது சொந்த ராசியில் பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்களுக்குப் பல துறைகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண உறவுகள் அமையலாம்.
மேலும், இந்தக் காலகட்டத்தில் திடீர் நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
சுக்கிரன் கடக ராசியில் இருந்து மாளவிய ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால், கடக ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். தொழிலபதிர்கள் சிறந்த பலன்களை பெறுவார்கள்.
உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் சொத்துகளை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும்.
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் இந்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இது பெரும் நன்மைகளைக் கொண்டுவரும். இந்த சுப யோகத்தின் தாக்கத்தால், உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உங்கள் எல்லா முயற்சிகளிலும் சிறந்த பலன்களைப் பெறலாம். உங்கள் முயற்சிகளளுக்கு பாராட்டுகுளை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும்.
சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்கள் நேர்மறையான ஆற்றலை பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில், உங்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்களின் மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும்.
குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிடிவாதப் போக்கைக் குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகள், பல்வேறு ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee News Tamil) பொறுப்பேற்காது)