Shukra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் இருக்கிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேலும், நட்சத்திர பெயர்ச்சியும் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், சுக்கிரன் அக்டோபர் மாதத்தில் வக்ரமாகவுள்ளார். துலாம் ராசியில் அக்டோபர் 3ஆம் தேதி சுக்கிரன் வக்ரமடைய உள்ளார்.
சுமார் 42 நாட்களுக்கு வரை சுக்கிரன் துலாம் ராசியில் வக்ரமடைய உள்ளார். அதன்பின்பு, நவம்பர் 14ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இந்த வக்ர பயணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் வக்ர நிலையால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வம் பெருகும்.
கடக ராசியின் 4வது வீட்டில் சுக்கிரன் வகர்மடைய உள்ளார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை காண்பார்கள். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு செயல்களில் சிந்தித்து செயல்படவும்.
உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து பணிகளில் புதுமையான சூழல் அமையும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தடைகள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுன ராசியின் 5வது வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உருவாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும் விவேகமும் வெளிப்படும்.
வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். பணி தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும்.
மகர ராசியின் 10வது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைய உள்ளார். மகர ராசியினருக்கு அதிர்ஷ்டம் செல்வம் பெருகும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்து வந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் தீர்வுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)