சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல், கலை, வசதி மற்றும் செழிப்புடன் தொடர்புடைய கிரகமாக பார்க்கப்படுகிறார். ரிஷபம், துலாம் ஆகிய இரு ராசிகளுக்கும் அதிபதியான சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்து அடுத்த ராசிக்கு நகர்வார்.
தற்போது கன்னி ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிரன், செப்டம்பர் 2 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைய உள்ளார். துலாம் சுக்கிரனின் சொந்த வீடாக இருப்பதால், இந்தப் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் மூலம் மாளவ்ய ராஜயோகம் உருவாக உள்ளது.
இந்த கிரக மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசியினருக்கு பணம், தொழில், முதலீடு, வேலை மற்றும் பயணம் போன்ற விஷயங்களில் கூடுதல் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். குறிப்பாக நிதி ரீதியாக முன்னேற்றம் காணக்கூடிய 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் (Aries Zodiac Signs)
மேஷ ராசியினருக்கு சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி பல்வேறு வகைகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான சூழல் சாதகமாக அமையும். தொழில் மற்றும் பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களும் படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் சிறப்பாக செயல்படக்கூடும்.
மிதுனம் (Gemini Zodiac Signs)
மிதுன ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி குடும்பம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றத்தை கொண்டு வரக்கூடும். படிக்கும் மாணவர்களுக்கு கவனம் மற்றும் ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முதலீடு செய்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து, அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கலாம்.
சிம்மம் (Leo Zodiac Signs)
சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் வெற்றியை தரக்கூடிய காலமாக இருக்கலாம். புதிய நபர்களுடனான அறிமுகம் ஏற்பட்டு, அந்த தொடர்புகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக மாறக்கூடும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் உங்களுடைய திறமைக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதி நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து, வருமான நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
விருச்சிகம் (Scorpio Zodiac Signs)
விருச்சிக ராசியினருக்கு சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி பொருளாதார ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம். எதிர்பாராத சில வழிகளிலும் பணவரவு கிடைக்கக்கூடும். வேலை தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும். போட்டிகளில் பங்கேற்பவர்கள் வெற்றியை எதிர்பார்க்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் எதிர்பார்த்த பணியிடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். நிலுவையில் உள்ள சட்டம் தொடர்பான விஷயங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)