மக நட்சத்திரத்தில் சூரியன், கேது, புதன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு இது அதிர்ஷ்டமான நேரம்
Planet Transit Effects: சூரியன், புதன், கேது ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பது அனைத்து ராசிகளுக்கும் தனித்துவமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Surya, Ketu, Budh Yuti: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அத்தகைய மாற்றங்களின் போது ஒரே ராசி அல்லது நட்சத்திரத்தில் பல கிரகங்களும் சேர்வதுண்டு. அப்படிப்பட்ட நிகழ்வுகள் 'யுதி' அல்லது 'கிரக சேர்க்கை' எனப்படுகிறது.
சூரியன், புதன், கேது சேர்க்கை
தற்போது, கிரகங்களின் ராஜாவான சூரியனும், கிரகங்களின் இளவரசனான புதனும் மக நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர். தற்செயலாக, கேதுவும் இதே நட்சத்திரத்தில் இருப்பதால், ஒரு தனித்துவமான கிரக அமைப்பு உருவாகியுள்ளது.
சூரியன் அடுத்த நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடையும் நாளான ஆகஸ்ட் 31, 2026 வரை இந்த அமைப்பு நீடிக்கும். இந்த மூன்று சக்திவாய்ந்த கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இருப்பது அனைத்து ராசிகளுக்கும் தனித்துவமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
இந்த கிரக அமைப்பின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படு. இதனால் சில ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெறக்கூடும் என்றாலும், மற்றவர்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். இருப்பினும், இந்த கிரக அமைப்பு குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுதல், விரும்பிய வேலையை அடைதல், தொழில் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தேர்வுகளில் சிறந்த முடிவுகளைப் பெறுதல் போன்ற பலன்களைப் பெறலாம்.
மக நட்சத்திரத்தில் சூரியன், புதன், கேது சேர்க்கையால் சிறந்த நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
| ராசி | பலன்கள் |
| கடகம் | சிறப்புப் பலன்கள் |
| துலாம் | புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி |
| மகரம் | முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் |
மேலும் படிக்க | செப்டம்பர் 2 முதல் பணமழை.. சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!
கடகம் (Cancer): சிறப்புப் பலன்கள்
சூரியன், புதன், கேது கிரக சேர்க்கையால் கடக ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். அரசுத் துறையில் முன்பு தேங்கிக் கிடந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். அலுவலகச் சுழலும் வீட்டுச் சூழலும் நேர்மறையாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பிற்கான சிறந்த பலன்களை நீங்கள் காணக்கூடும். புதிய முயற்சிகளைத் தொடங்கவும் இது சாதகமான நேரமாக இது இருக்கும். பணிபுரியும் நபர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
துலாம் (Libra): புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை பல வித வெற்றிகளை அள்ளித்தரும். புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிகான வாய்ப்புகள் தென்படுகின்றன. முதலீடு தொடர்பான திட்டங்களில் நல்ல வருமானம் கிடைக்கலாம்.
வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் தொழில் மந்தநிலையில் இருந்திருந்தால், இப்போது லாபத்தைக் காணலாம். குடும்பத்தில் புதிய நபர் ஒருவர் இணையக்கூடும். புதிய வணிக ஒப்பந்தங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
மகரம் (Capricorn): முதலீடுகள் மூலம் நல்ல வருமானம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன், கேது ஆகிய கிரகங்களின் சேர்க்க லாபகரமானதாக இருக்கும். முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் பெறலாம். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும், மேலும் சாதகமான முதலீட்டு முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளும் உருவாகலாம். உங்கள் நிதி நிலை வலுவடையலாம் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகளும் பிறக்கலாம். வேலையில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும், மேலும் உங்களுக்கு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஒரு பணியும் இக்காலத்தில் நிறைவடைய வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)