Surya Nakshatra Gochar: ஜோதிடத்தில் நவகிரகங்களில் முதன்மையானதாக சூரிய பகவான் அறியப்படுகிறழர். சூரியனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. 2026ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி நடக்க உள்ளது. சூரிய பகவான் மூன்று முறை டிசம்பர் மாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். மூன்று முறை தனது நட்சத்திரத்தை மாற்ற உள்ளார்.
அதன்படி, சூரியன் டிசம்பர் 3ஆம் தேதி கேட்டை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இரண்டாவது நட்சத்திர பெயர்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி அனுஷம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். தொடர்ந்து, டிசம்பர் 29ம் தேதி சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். ஒரே மாதத்தில் மூன்று முறை சூரியன் பெயர்ச்சி அடைவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் மூன்று முறை சூரியன் பெயர்ச்சி அடைவது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். உங்கள் வேலையிலும், தொழிலிலும் வெற்றி காண்பீர்கள். இந்த காலக்கட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகளை கேட்பீர்கள், செயலில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலையில் கவனம் வேண்டும். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்பட்டு, புதிய பாதை புலப்படும். நண்பர்கள் ஆதரவுடன் சில பணிகளை முடிப்பீர்கள். இனம் புரியாத தேடல்களால் குழப்பம் ஏற்படும். கடன் தொடர்பான உதவிகள் சாதகமாகும்.
சூரியன் மூன்று முறை நட்சத்திர பெயர்ச்சி அடைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். இது உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு பல சிறந்த வாய்ப்புகளை வழங்கக்கூடும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகளைப் பெற வாய்ப்புள்ளது.
உங்கள் சமூக அந்தஸ்து உயரும். முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும், மேலும் உங்கள் பழைய கடன்களிலிருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கலாம். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சூழலுக்கு ஏற்ப பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். நீண்ட தூர பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். மறைமுகமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உருவாகும்.
சூரியனின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். நிதி ரீதியாக நன்மை பயக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையலாம். எந்தவொரு முயற்சியிலும் உங்களுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தரும். தொழிலதிபர்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை இறுதி செய்யலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றங்கள் உருவாகும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
சூரியன் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். உங்கள் கடின உழைப்புக்கு வேலையில் பலன் கிடைக்கும். அரசுப் பணிகளில் உள்ள தடைகள் படிப்படியாக நீங்கும். வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வமின்மை உண்டாகும். முதுநிலைக் கல்வியில் விவேகம் வேண்டும். இசை துறைகளில் மாறுபட்ட சூழல்கள் உண்டாகும். நிர்வாக விஷயங்களில் நிதானம் வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். சுப காரியங்களில் இருந்த மந்த நிலை விலகும்.
மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் பிறக்கும். கால்நடைப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும்.
வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)