IPL 2027 Mumbai Indians Purse Amount Explained: ஐபிஎல் 2027 தொடரை முன்னிட்டு வரும் டிசம்பர் 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது. மினி ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் தயாராகி வருகிறது.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி வீரர்கள் தக்கவைப்பு நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு அணியின் பர்ஸ் தொகையும் மாற்றமடைந்திருக்கின்றன. அந்த வகையில், வீரர்கள் தக்கவைப்புக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் பர்ஸ் தொகை ரூ.32.60 கோடி ஆக இருந்தது.
ஆனால், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பர்ஸ் தொகை ரூ.30.25 கோடியாக குறைந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஏன் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ரூ.2.35 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது என உங்களின் சந்தேகம் புரிகிறது. அதற்கு ஹர்திக் பாண்டியாதான் காரணம். அது ஏன் தெரியுமா...? விரிவாக இதில் பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டில் ஐபிஎல் தக்கவைப்பு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அந்த விதிகளை உதாரணங்களுடன் விரிவாக இங்கு காணலாம்.
உதாரணத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை காணலாம்
Thank god this video ended before a major leak... 😬 #TATAIPLRetention https://t.co/tebaaRYmLE
— Mumbai Indians (@mipaltan) November 17, 2026
Less than a month to go for the #TATAIPLAuction and here's how the squads have shaped up 🔢 #TATAIPL https://t.co/oLi8ktOMPA
— IndianPremierLeague (@IPL) November 19, 2026
ஹர்திக் பாண்டியா டிரேட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ரூ.2.35 கோடி பிடித்தம் செய்யப்படவில்லை. ஐபிஎல் தக்கவைப்பு விதிகளின்படியே, ரூ.2.35 கோடி குறைவாக செலவிடப்பட்டதால் அந்த தொகை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து கழிக்கப்பட்டிருக்கிறது.