• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /பாஜக பக்கம் சாயும் திமுக? மீண்டும் வரும் Delimitation மசோதா... திடீர் மாற்றம் ஏன்? Explained

பாஜக பக்கம் சாயும் திமுக? மீண்டும் வரும் Delimitation மசோதா... திடீர் மாற்றம் ஏன்? Explained

Delimitation Bill: மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டின் 7.2% இடங்கள் உறுதி செய்யப்பட்டால் திமுக ஆதரவு அளிக்குமா? மக்களவை பலம் மற்றும் அரசியல் கணக்குகளின் முழு அலசல் இதோ...

Written BySudharsan G
Published: Nov 27, 2026, 08:32 IST|Updated: Nov 27, 2026, 08:47 IST
joinshare
பாஜக பக்கம் சாயும் திமுக? மீண்டும் வரும் Delimitation மசோதா... திடீர் மாற்றம் ஏன்?  Explained
Image Credit: Delimitation Bill | Image Source : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சூரியன் பெயர்ச்சி: டிசம்பர் முதல் 5 ராசிக்கு ராஜவாழ்க்கை.. டபுள் அதிர்ஷ்டம், டபுள் வெற்றி!

சூரியன் பெயர்ச்சி: டிசம்பர் முதல் 5 ராசிக்கு ராஜவாழ்க்கை.. டபுள் அதிர்ஷ்டம், டபுள் வெற்றி!

2

பாஜக பக்கம் சாயும் திமுக? மீண்டும் வரும் Delimitation மசோதா... திடீர் மாற்றம் ஏன்? Explained

3

மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றுவோம்... போட்டோவை காட்டி மத்திய அமைச்சர் பேச்சு

4

ஹர்திக் டிரேட் காரணமில்லை... பின் ஏன் மும்பை இந்தியன்ஸிடம் இருந்து ரூ.2.35 கோடி கழிக்கப்பட்டது? Explained

5

கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Delimitation Bill, Explained:பிரதமர் மோடி தலைமையில் இன்று (நவ. 27) பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட இருக்கிறது. இதில் வரும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் தரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறுகிய கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த வாரம் கூட இருக்கிறது. மக்களவை வரும் நவம்பர் 30ஆம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதியும் தொடங்க உள்ளது. இரு அவைகளும் டிசம்பர் 3ஆம் தேதி நிறைவடையும்.

மேலும் படிக்க | அமைச்சர்கள் வெளிநாடு போகாதீங்க!! பிரதமர் மோடி உத்தரவு!! டிசம்பர் 15-க்கு முன் நாடாளுமன்ற கூட்டத்தொடர்?

ஏப்ரல் மாதம் வீழ்த்தப்பட்ட மசோதா

இந்த குறுகிய கால கூட்டத்தொடரில்தான் மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக  கூட்டணி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் மாதமே தொகுதி மறுவரையறை திருத்த மசோதா வாக்கெடுப்பு மக்களவையில் தோல்வியில் முடிந்தது.

அப்படியிருக்க, மீண்டும் பாஜக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுமா? இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு என்ன என்பதை இங்கு காணலாம்.

Govt moves to reconvene Parliament from November 30 to December 3 Read @ANI Story I https://t.co/u18jORbSI1 #KirenRijiju #LokSabha #RajyaSabha #ParliamentSession #Delimitation #WomenReservation https://t.co/uqQFWs0VDj

— ANI Digital (@ani_digital) November 26, 2026

பாஜகவுக்கு திமுகவின் ஆதரவு

  • மக்களவையில் அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்றாக வேண்டும்.
  • அந்த வகையில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது சார்ந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரும் போது, தமிழ்நாட்டின் தற்போதைய 7.2 சதவீத மக்களவை இடங்கள் உறுதியளிக்கப்பட்டால் திமுகவின் ஆதரவு ஆளும் தரப்புக்கு கிடைக்கும் என தகவல்கள் கூறப்படுகின்றன.
  • திமுகவிடம் இருந்து தெளிவான சிக்னல் பாஜகவுக்கு கிடைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. திமுக மட்டுமின்றி சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் ஆதரவும் ஆளும் பாஜக தரப்புக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

NCP-SP, YSRCP ஆதரவும் என்டிஏவுக்கு...

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், மூன்று சீட்கள் காலியாக உள்ளன. இதனால், மொத்த பலம் 540 ஆக உள்ள நிலையில், இந்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற சுமார் 360 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதில் திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்களும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸின் 8 மக்களவை உறுப்பினர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

திமுகவின் நிலைப்பாடு என்ன?

  • இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னணி தலைவர்களை மேற்கொள்காட்டி The Indian Express வெளியிட்டுள்ள செய்தியின்படி, தமிழ்நாட்டின் தற்போதைய 7.2 சதவீத மக்களவை இடங்கள் உறுதியளிக்கப்படும்பட்சத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  
  • மேலும், மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்கு அரசியல் ரீதியாக தென்னிந்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் இரு திமுக தலைவர்கள் உறுதியாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும், தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தாங்கள் ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் இடங்களின் சதவீதத்திற்கு எந்த பங்கமும் வராமல் இருக்க வேண்டும் என்றும் அதில் ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேநேரத்தில், பாஜக கொண்டுவரும் அனைத்து விஷயங்களையும் திமுக எதிர்க்க வேண்டும் என்பது இல்லை என்றும் பிரச்னைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும் என திமுகவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜகவினர் இதுசார்ந்து திமுகவை அணுகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

திமுக முன்னர் சொல்லியது என்ன?

  • 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிராக அரசினர் தனித் தீர்மானத்தை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் கொண்டுவந்தது. இந்த தீர்மானம் ஒருமனதாக அப்போது நிறைவேற்றப்பட்டது.
  • அதில் 2026ஆம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
  • மக்கள்தொகையின் அடிப்படையில்தான் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய மாநிலங்களுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டு விகிதத்தை மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாற்றியமைக்காமல், அப்படியே பராமரிக்க உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றமா?

அதன்படி ஒருவேளை, தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை இடங்கள் அதே 7.2% ஆக தொடரும் என புதிய சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டால், அது திமுகவின் முந்தைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக கருதலாம். இதன்படியே திமுக தனது ஆதரவை அளிக்க முன்வந்திருப்பதாக புரிந்துகொள்ள முடிகிறது.

அதேநேரத்தில், 2026 பொதுத்தேர்தலுக்கு பின்னர் திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கசப்புணர்வும் முக்கிய காரணம் எனலாம். சோனியா காந்தியின் மேல் திமுகவுக்கு அதே மரியாதை நீடிப்பதாகவும், ராகுல் காந்தி மீதுதான் திமுகவுக்கு அதிருப்தி என திமுகவின் தலைவர்கள் கூறியதாக The Indian Express அவர்களை மேற்கொள்காட்டி குறிப்பிட்டுள்ளது.

அரசியல் கணக்குகள் விவரம்

  • ஏப்ரல் மாதத்தில், தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அப்போது மொத்தம் 539 உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்தனர். வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர். 11 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
  • அப்போது 352 வாக்குகள் தேவைப்பட்டது, ஆதரவாக 298 வாக்குகளே கிடைத்தன. 54 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
  • தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. திரிணாமுல் காங்கிரஸில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய 22 எம்.பி.,க்கள், கூட்டணி கட்சிகள் உள்பட என்டிஏ பலம் 322 ஆக உயர்ந்திருக்கிறது.
  • திமுக - 22, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி - 8, ஒய்எஸ்ஆர்சிபி - 4 என 34 எம்.பி.க்களின் ஆதரவு பாஜகவுக்கு தற்போது கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது 543 இடங்களில் 3 இடங்கள் காலியாக உள்ளன. என்டிஏவின் 322 மற்றும் புதிய ஆதரவு கட்சிகளின் 34 இரண்டையும் சேர்த்தால் 356 வருகிறது. அதாவது, மொத்தமுள்ள 540 பேரில்,  360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதில் நான்கு வாக்குகள் மட்டும் குறைவாக இருக்கிறது.
  • வாக்கெடுப்பில் கலந்துகொள்பவர்களின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். ஒருவேளை ஏதாவது சில உறுப்பினர்கள் வருகை தரவில்லை என்றால் தேவைப்படும் ஆதரவு எண்ணிக்கை குறையலாம், அதன்படி கூட மசோதா மக்களவையில் நிறைவேறலாம்.
  • எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு கடந்த முறை 230 வாக்குகள் கிடைத்தன. தற்போது மூன்று சுயேச்சைகளின் ஆதரவை சேர்த்து 175 வாக்குகளே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 21 மாநிலங்கள்.. 2029 இலக்கு! அமித் ஷாவின் UCC திட்டம் நிறைவேறுமா? -Explainer

Add Zee News as a Preferred Source
TAGS:
DMK