• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /அக்டோபர் 17 வரை ஜாக்கிரதை! சூரியன் - சனி சமசப்தம யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு சிக்கல்?

அக்டோபர் 17 வரை ஜாக்கிரதை! சூரியன் - சனி சமசப்தம யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு சிக்கல்?

அக்டோபர் 17 வரை நீடிக்கும் சூரியன் - சனி சமசப்தம யோகத்தால் 3 ராசிக்காரர்கள் பணம், வேலை மற்றும் உறவுகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

Written ByR Balaji
Published: Sep 18, 2026, 11:15 AM IST|Updated: Sep 18, 2026, 11:18 AM IST
joinshare
அக்டோபர் 17 வரை ஜாக்கிரதை! சூரியன் - சனி சமசப்தம யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு சிக்கல்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகங்களாக சூரியன் மற்றும் சனி கருதப்படுகின்றனர். சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாக பார்க்கபடுகிறார். அதே நேரத்தில், சனி கர்மா மற்றும் நீதியுடன் தொடர்புடைய கிரகமாக கருதப்படுகிறார்.

சூரியன் பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அந்த வகையில், செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சூரியன் இருக்கும் கன்னி ராசிக்கும், சனி இருக்கும் மீன ராசிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு சமசபதம் யோகம் ஏற்படுகிறது.

இந்த கிரக அமைப்பு அக்டோபர் 17 ஆம் தேக்தி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில், அடுத்த 30 நாட்களில் சூரியன் - சனியின் சமசப்தம யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேஷம் (Aries Zodiac Signs)

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் 6 ஆம் வீட்டிலும், சனி 12 ஆம் வீட்டிலும் இருப்பதால் இந்த சமசப்தம யோகத்தின் தாக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பணியிடத்தில் வழக்கத்தை விடகூடுதல் பொறுப்புகள் மற்றும் வேலைப்பளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களுடன் கருந்து வேறுபாடு ஏற்படும் சூழலும் இருக்கக்கூடும். இதனால் செய்ய வேண்டிய பணிகளில் கவனம் சிதற வாய்ப்புள்ளது.

கூட்டு தொழிலில் இருப்பவர்கள் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளில் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. உடல்நலத்தை பொறுத்தவரை தலைவலி, செரிமானம் தொடர்பான சிறிய பிரச்சனைகள் போன்றவை தொந்தரவு செய்யக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் (Libra Zodiac Signs)

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் 12 ஆம் வீட்டிலும் சனி 6 ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் உங்களது உழைப்புக்கு எதிர்பார்த்த அளவுக்கு உருவாகலாம். சில விஷயங்களில் தாமதம் ஏற்படுவதால் மனதில் ஏமாற்றம் தோன்றினாலும், அதனால் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் பொறுமையுடன் செயல்படுவது முக்கியம். உடல்நலத்தில் அலட்சியம் காட்டினால் கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. யோசிக்காமல் கூறம் ஒரு கருத்து கூட உங்களது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பணம் தொடர்பான முடிவுகளிலும் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.

மீனம் (Pisces Zodiac Signs)

மீன ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டில் சனி மற்றும் 7 ஆம் வீட்டில் சூரியன் இருப்பதால் சமசப்தம யோகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கலாம். குறிப்பாக குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் தேவையற்ற கருத்து வேற்பாடுகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையுடன் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிப்பதும் சிறிய விஷயங்களை பெரிய வாக்குவாதமாக மாற்றாமல் இருப்பதும் நல்லது.

இந்த காலகட்டத்தில் முக்கியமான பண முடிவுகளை அவசரமாக எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்களது செயல்பாடுகளை உயர் அதிகாரிகள் கவனிக்கும் குழல் இருக்கலாம் என்பதால் ஒப்படைக்கப்படும் பணிகள் பொறுப்புடன் செய்து முடிக்க வேண்டும். சிறிய அலட்சியமே தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். சிலருக்கு மனதில் அழுத்தம் அல்லது பதற்றம் போன்ற உணர்வுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.  

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan