• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /விநாயகர் சதுர்த்தி நாளில்...’இந்த’ 4 ராசிக்கு செம்ம லக்! யாருக்கு தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி நாளில்...’இந்த’ 4 ராசிக்கு செம்ம லக்! யாருக்கு தெரியுமா?

இன்னும் சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி நாள் வரப்போகிறது. இந்த நாளில், எந்தெந்த ராசிகளுக்கு பலன் கிடைக்கப்போகிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 09, 2026, 15:30 IST|Updated: Sep 10, 2026, 09:17 IST
joinshare
விநாயகர் சதுர்த்தி நாளில்...’இந்த’ 4 ராசிக்கு செம்ம லக்! யாருக்கு தெரியுமா?
Image Credit: Ganesh | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

“எது தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு தொடங்கு” என்பார்கள். இந்தியாவை பொறுத்தவரை விநாயகருக்கு அவருக்கு கணேசன், பிள்ளையார், கணபதி என பல பெயர்கள் இருக்கிறது. அதே சமயத்தில், விநாயகரை வழிபட்டால், வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கி, வாழ்வின் பல முக்கிய தொடக்கங்களை அமையும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகரை வணங்கி வழிபடும் ஒரு நாள்தான், விநாயகர் சதுர்த்தி.

விநாயகர் சதுர்த்தி:

தடைகளை நீங்கி, அருள் வழங்கும் முதற்கடவுளான விநாயக பெருமான் அவதரித்த நாளாக இது கொண்டாடப்படுகிறது என கூறப்படுகிறது. தமிழ் மாதமான ஆவணி வளர்ப்பிறை சதுர்த்தி திதியில்தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல பேர் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலைகளை வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர். பிள்ளையாருக்கு பிடித்த, கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை படையலாக போட்டு வழிபடுவோம். இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி, வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளிற்கு பிறகு சில ராசிகளின் தலையெழுத்தே மாற இருக்கிறது. அந்த ராசிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை, அவர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒரு நல்ல செய்து வீடு வந்து சேரும். இவர்கள், சில நாட்களாக குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக முயற்சி எடுத்து வந்த நிலையில், அந்த முயற்சிகள் சரியாக ஈடேறும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து, அதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கிறது என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகிறது. இவர்களுக்கு, புதிய தொடர்புகள் கிடைத்து அவை வருங்காலத்திலும் இவர்களுடன் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | செப்டம்பர் 9 ராசிபலன்: இன்று யார் யாருக்கு பொன்னான நாள்?

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிறகு புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். அவர்கள், வேலை அல்லது தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படுவதற்கான சூழலும் அமையலாம்.

விநாயகர் சதுர்த்தி வழிபடுவது எப்படி?

  • விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளே, வீட்டை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • சதுர்த்தி நாளன்று, அதிகாலையிலேயே குளித்துவிட்டு, வாசலில் மவிலை தோரணம் கட்ட வேண்டும்.
  • பூஜையறையில் ஒரு மணையை வைத்து, அதன் மேல் சுத்தமான துணி விரித்து விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.
  • விநாயகர் சிலைக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றை வைத்து, மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
  • அருகம்புல் மற்றும் ஏலக்காய் மாலையையும் பிள்ளையாருக்கு சாற்றுவது மிகவும் சிறப்பாகும்.
  • விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள், உள்ளிட்டவற்றை வைத்து படைக்க வேண்டும். தீபாராதனை கட்டி, விநாயகருக்கான மந்திரங்களை கூறி வழிபட வேண்டும்.
  • வழிபாடு முடிந்த பிறகு 3 அல்லது 5 நாட்கள் கழித்து, பிள்ளையாரை அருகில் இருக்கும் நீர் நிலையில் கரைக்கலாம்.

ஏன் பிள்ளையாரை முதலில் வழிபடுகிறோம்?

நம்மில் பலர், எந்த சுப காரியம் தொடங்கும் முன்னரும் முதலில் பிள்ளையாரைத்தான் கும்பிடுகிறோம். இவ்வளவு ஏன், கோயிலுக்கு செல்லும் போது கூட, முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டுதான் பிற தெய்வங்களை வழிபட செல்கிறோம். இது ஏன் என்று எப்போதாவது சிந்ததுண்டா?

விநாயகரை வழிப்பட்டால், அந்த காரியம் வெற்றியடையும் என்பதன் காரணமாகத்தான் நாம் முதலில் விநாயகரை வழிபடுவதாக கூறப்படுகிறது.

விநாயகர் தடைகளை நீக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறார். இதனால், நாம் செய்யப்போகும் இறை வழிபாடு எந்த இடையூறுமின்றி, முழுமையான பலனைத்தர வேண்டும் என்பதற்காகவே  முதலில் அவரை வணங்குகிறோம்.

மேலும் படிக்க | கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு இக்கட்டான நேரம், சூதானமா இருங்க!

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan