திருவண்ணாமலையில் சனி, ஞாயிறு அனுமதி கிடையாது? புதிய கட்டுப்பாடுகள்.. அறநிலையத்துறை விளக்கம்
Tiruvannamalai Temple Latest News: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் தரிசனம் குறித்து அறநிலையத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அபிஷேக தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
Tiruvannamalai Temple Latest News: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், விசேஷ தினங்களில் திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால், கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. அதே நேரத்தில், கோயில் கருவறை பகுதி குறுகலாக இருப்பதால், ஒரே நேரத்தில் பக்தர்கள் உள்ளே செல்லும்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால், பக்தக்ரள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
இதுகுறித்து திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அபிஷேக தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விளக்கம். அபிஷேக தரிசனத்தின்போது பக்தர்கள் சுவாமி சன்னதியில் சுமார் ஒரு மணி நேரமும், அம்மன் சன்னதியில் சுமார் 30 நிமிடங்களும் அமர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக வயது முதிர்ந்த பக்தர்கள் மற்றும் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ள பக்தர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படாமல் தடுக்கும் வகையில், அபிஷேக தரிசனத்திற்கு செல்லும் முன்பாக தேவையானவர்களுக்கு ORS பானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும் சூழ்நிலையில், தேவைக்கேற்ப அவர்களை மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அபிஷேக தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என வெளியிடப்பட்டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. மருத்துவப் பரிசோதனை கட்டாயப்படுத்தப்படவில்லை.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, தேவைப்படும் பக்தர்களுக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை. ORS பானம் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சனி, ஞாயிற்று கிழமைகளில் அனுமதி கிடையாது?
அதே நேரத்தில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கருவறை அபிஷேகத்தில் பக்தர்களூககு அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் கருவறை பகுதியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்களின் உடல்நிலை, பாதுகாப்பு மற்றும் கோயில் கருவறையின் அமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. ஆனால், அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பில், சனி, ஞாயிறு அபிஷேகத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கவில்லை
திருவண்ணாமலை கோயில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
- annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
- அங்கு முகப்பு பக்கத்தில் online booking service என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், Paid Booking Service என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- இதில் சிறப்பு தரிசனம் (special Darshan) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த தேதியில் தரிசனம் மேற்கொள்கிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்.
- இதன்பிறகு, முகவரி, பெயர், இமெயில், மொபைல் நம்பர் போன்ற விவரங்களை உள்ளிட்டு, கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சிறப்பு தரிசனத்திற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாய் கட்டண தரிசனத்தை யுபிஐ, கிரெடிட் கார்டு, நெட் பேக்கிங் மூலம் செலுத்த வேண்டும். இதன்பிறகு, உங்கள் எண்ணிற்கு கட்டண ரசீதும், தரிசன டிக்கெட்டும் அனுப்பப்படும்.
டிக்கெட் கட்டண விவரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.50, அம்மன் சிறப்பு அபிஷேக தரிசனத்திற்கு ரூ.2500, தமிழில் அர்ச்சணைக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளருது. எனவே, திருவண்ணாமலை கோயில் செல்ல விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: எதிரெதிர் சந்திக்கும் சனி - சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!