ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை, அவற்றின் சேர்க்கை மற்றும் பரஸ்பர தொடர்புகள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. குறிப்பிட்ட கிரக நிலைகள் உருவாகும்போது சில யோகங்கள் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவற்றில் சில சாதகமான பலன்களை வழங்கும் நிலையில், சில யோகங்கள் சவால்களை ஏற்படுத்தக்கூடியவையாக கருதப்படுகின்றன.
அந்த வகையில், ஜோதிடத்தில் வைதிருதி யோகம் அசுபமான யோகங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இந்த யோகம் உர்வாகும் காலத்தில் தொடங்கப்படும் அல்லது ஏற்கனவே நடைபெற்று வரும் சில காரியங்களில் தடைகள் ஏற்படலாம்.
அக்டோபர் 11 ஆம் தேதி ஷாரதிய நவராத்திரியின் முதல் நாள் வருகிறது. இதே நாளில் வைதிருதி யோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமாக இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, பணவரவு உள்ளிட்ட விஷயங்களில் சவால்களை ஏற்படுத்தக்கூடும். அப்படி, வைதிருதி யோகத்தால் சிக்கலை சந்திக்க இருக்கும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பணிகளை திட்டமிட்டபடி முடிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். முக்கியமான வேலைகளில் எதிர்பாராத தடைகள் உருவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் விஷயத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் எதிர்பாராத நிதி இழப்புகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்திலும் சிறிய விஷயங்கள் கூட பிரச்சனையாக மாறக்கூடிய சூழல் உருவாகலாம். தொடர்ச்சியான தடைகள் மன அழுத்தத்தையும் தன்னம்பிகை குறைவையும் ஏற்படுத்தலாம். துணையுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகும் வாய்ப்பும் இருப்பதால், ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசுவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உறவை பாதுகாக்க உதவும். வாகனம் ஓட்டுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கனவே உடல் நல பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அவற்றில் மீண்டும் சிரமங்கள் ஏற்படாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளும் வேலைப்பளுவும் ஏற்படலாம். அதே நேரத்தில், எதிர்பார்த்த அளவுக்கு சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். இதனால் அலுவலக சூழலில் தனக்கு எதிராக சில விஷயங்கள் நடப்பதாக அவர்கள் உணர வாய்ப்புள்ளது. வேலையை மாற்றுவது அல்லது தற்போதைய பணியில் இருந்து விலகுவது போன்ற எண்ணங்கள் ஏற்படலாம். இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக எந்த முடிவையும் எடுக்காமல் பொறுமையாக செயல்படுவது நல்லது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளிலும் எச்சரிக்கை தேவை. திருமண வாழ்க்கையிலும் சில கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். எனவே துணையுடன் பேசும்போது பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். பயணங்களை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் சில தாமதங்கள் அல்லது பின்னடைவுகள் ஏற்படலாம். உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல், சிறிய அறிகுறிகள் தென்பட்டாலும் உரிய கவனம் செலுத்துவது நல்லது.
மகர ராசிக்காரர்களுக்கும் வைதிருதி யோகத்தின் காலகட்டம் சற்று சவால் நிறைந்ததாக இருக்கலாம். குறிப்பாக வேலை தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் சாதக, பாதக அம்சங்களை நன்றாக ஆராய்வது நல்லது. நிதி விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதுடன், வருமானம் எதிர்பார்த்தபடி இல்லாமல் போகும் சூழலும் உருவாகலாம். இதனால் சேமிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. மகர ராசிக்காரர்கள் பேசும் வார்த்தைகளை மற்றவர்கள் வேறு விதமாக புரிந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக தனிப்பட்ட விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சில பின்னடைவுகளையும் சக ஊழியர்களின் எதிர்மறையான கருத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். நிதி நிலை மேலும் பாதிக்கப்படாமல் இருக்க தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். துணையுடன் பேசும்போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து, உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை செலுத்துவது இந்த காலகட்டத்தில் முக்கியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)