SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் சிலையை எந்த நாளில் கரைக்கலாம்? முழு விவரம்

Vinayagar Chaturthi 2026: விநாயகர் சிலையை எப்போது கரைக்கலாம், சிலையை கரைக்கும் முறை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Written By Umabarkavi K
Published: Sep 14, 2026, 08:14 IST | Updated: Sep 14, 2026, 08:42 IST
Join

Vinayagar Chaturthi 2026: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (செப்டம்பர் 14) கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இன்று பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி, வீடுகளில் விநாயகரை வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில், விநாயகர் சிலையை எப்படி கரைக்கலாம், எந்த நாளில் கரைக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

விநாயகர் சிலை வாங்கும் முறை

விநாயகர் சிலையை வாங்கும்போது கவனமாக சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதாவது, முடிந்தவரை மண் பிள்ளையார் வாங்கும் மிகவும் நல்லது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், வண்ண நிறங்களில் விநாயகர் சிலைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

நின்று கொண்டு இருக்கும் விநாயகரை வாங்குவதை தவிர்க்க வேண்டும். திருஷ்டி விநாயகர், நடனம் ஆடும் விநாயகரை வாங்க கூடாது. விநாயகரின் துதிக்கை இடது பக்கமாக திருப்பி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்கவும். விநாயகர் கண்களை திறந்து உங்களை பார்ப்பது போல் இருக்கும் சிலையை வாங்க வேண்டும்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்வது எப்படி? உகந்த நேரம் என்ன?

விநாயகர் சிலையை கரைக்கும் முறை

விநாயகர் சிலையை எப்படி பார்த்து பார்த்து வாங்குகிறோமோ அதே போன்று கரைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் வைக்கப்படும் களிமண் விநாயகர் சிலையை உரிய முறையில் பூஜை செய்து, குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப பின்னர் நீரில் கரைக்கலாம்.

சிலை கரைக்கும் முன் “பூஜையில் ஏற்பட்ட குறைகள் அனைத்தையும் மன்னித்து, எங்கள் குடும்பத்தின் மீது என்றும் அருள் புரிய வேண்டும்” என்று விநாயகரிடம் பிரார்த்தனை செய்யலாம். விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைக்க வசதி இருப்பவர்கள் தங்கள் கைகளால் சென்று கரைக்கலாம்.

முடியாதவர்கள் உங்கள் பகுதியில் பெரிய சிலை அமைத்து விநாயகர் சதுர்த்த கொண்டாடும் இடத்தில் நீங்கள் வழிபட்ட சிறய விநாயகரையும் கொண்டு சென்று வைத்தால், அவர்கள் எடுத்து சென்று அதை கடல் அல்லது ஆற்றில் கரைத்து விடுவார்கள். அதற்கும் முடியாதவர்ள் வீட்டில் ஒரு வாலியில் தண்ணீர் வைத்து, அதற்குள் விநாயகர் சிலையை வைத்து கரைத்து விடலாம். இந்த மண்னை செட்டிகள் நட்டு வைக்க பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி 2026: தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள்.. சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு!

விநாயகர் சிலை கரைக்கும் நேரம்

விநாயகர் சிலையை செப்டம்பர் 13ஆம் தேதி வாங்கினால், செப்டம்பர் 17ம் தேதி (வியாழன்) காலை 8 மணி முதல் 9 மணி வரை அல்லது காலை 10.45 மணி முதல் பகல் 1.00 மணி வரையும் கரைக்கலாம். செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று (திங்கள்) வாங்கினால், செப்டம்பர் 16ஆம் தேதி (புதன்) காலை 9 மணி முதல் பகல் 12.00 மணி வரையும் விநாயகர் சிலையை கரைக்கலாம்.

பூஜை செய்ய உகந்த நேரம்

விநாயகர் சதுர்த்தி அன்று செப்டம்பர் 14ஆம் தேதி காலை 8.41 மணிக்கு சதுர்த்தி திதி தொடங்குகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி காலை 9.22 மணிக்கு சதுர்த்தி திதி நிறைவடைகிறது. செப்டம்பர் 13ஆம் தேதி பகல் 3.10 மணி முதுல் மாலை 4.20 மணி வரையும் பூஜை செய்யலாம். அல்லது மாலை 6 மணிக்கு பிறகு செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரையும் பூஜை செய்யலாம்.என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க; திருப்பதி பக்தர்களே.. டிசம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES