• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /அக்.1ல் வெளியாகும் உலகக் கோப்பை அட்டவணை; இந்தியாவுக்கு எப்போது போட்டி?

அக்.1ல் வெளியாகும் உலகக் கோப்பை அட்டவணை; இந்தியாவுக்கு எப்போது போட்டி?

2027 ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை அக்டோபர் 1ல் கேப்டவுனில் வெளியாகும் நிலையில், 14 அணிகள் பங்கேற்கும் தொடருக்கான தகுதி நிலவரமும் வெளியாகியுள்ளது.

Written ByR Balaji
Published: Sep 29, 2026, 19:13 IST|Updated: Sep 29, 2026, 19:17 IST
joinshare
அக்.1ல் வெளியாகும் உலகக் கோப்பை அட்டவணை; இந்தியாவுக்கு எப்போது போட்டி?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

2

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

3

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

4

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

5

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடந்தும் இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா இணைந்து வெளியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1ல் அட்டவணை வெளியீடு

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை அக்டோபர் 1 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் வெளியிடப்பட உள்ளது.

2023 உலகக் கோப்பையில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்த நிலையில், அடுத்த உலகக் கோப்பை மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2023 தொடரில் லீக் சுற்று முதல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது.

டிக்கெட் முன்பதிவும் தொடக்கம்

உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்படும் அதே நாளில் போட்டிகளுக்கான டிக்கெட் பால் முறையும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் ரசிகர்கள் டிக்கெட் பெறுவதற்கான பால் முறையில் தங்களது பெயரை பதிவு செய்ய முடியும்.

எனினும், அன்றைய தினமே டிக்கெட்ட்டுகள் நேரடியாக விற்பனைக்கு வராது. முதற்கட்டமாக டிக்கெட் பெற விரும்பும் ரசிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து பால் முறையில் பங்கேற்க வேண்டும்.

14 அணிகள் பங்கேற்பு

2027 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் 10 அணிகளின் இடங்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் உறுதி செயப்பட உள்ளன. நடப்பு ஏற்பாட்டாளர்களான தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள எட்டு அணிகள் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தங்களது நிலையை அடிப்படையாக கொண்டு தகுதி பெறும்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தரவரிசை மூலம் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளன. தரவரிசையில் தென்னாப்பிரிக்கா 3 வது இடத்தில் இருந்தாலும் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றாக இருப்பதால் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இதனால் 9 வது இடத்தில் இருக்கும் வங்கதேசத்துக்கும் தரவரிசை அடிப்படையில் உலகக் கோப்பையில் இடம் கிடைக்க உள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு தகுதி சுற்று

உலகக் கோப்பையில் எஞ்சியுள்ள நான்கு இடங்கள் தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. அந்த நான்கு அணிகளும் அட்டவணையில் தற்காலிகமாக Qualifier 1, 2, 3 மற்றும் 4 என குறிப்பிடப்பட உள்ளன.

முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தற்போது தரவரிசை மூலம் நேரடியாக தகுதி பெறும் நிலையில் இல்லை. எனவே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket