• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /இந்தியாவில் போட்டி.. ஆனால் ஆப்கானிஸ்தான் தான் Home Team! ஏன் தெரியுமா? Explained

இந்தியாவில் போட்டி.. ஆனால் ஆப்கானிஸ்தான் தான் Home Team! ஏன் தெரியுமா? Explained

ஆப்கானிஸ்தான் - இந்தியாவுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தாலும், இத்தொடரில் அப்கானிஸ்தான் அணிதான் Home Team ஆக கருதப்படுகிறது. அது எப்படி? இந்தியாவில் நடக்கும் போட்டிக்கு இந்தியா இல்லாமல் அப்கானிஸ்தான் எப்படி Home Team ஆனது? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Sep 15, 2026, 07:49 AM IST|Updated: Sep 15, 2026, 07:53 AM IST
joinshare
இந்தியாவில் போட்டி.. ஆனால் ஆப்கானிஸ்தான் தான் Home Team! ஏன் தெரியுமா? Explained

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்று போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலேயே நடைபெறுகின்றன. வழக்கமாக ஒரு அணி தனது சொந்த நாட்டில் விளையாடும்போது அந்த அணியே Home Team என அழைக்கப்படும். ஆனால் இந்த தொடரில் நிலைமை சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.

இந்தியாவில் போட்டி நடந்தாலும், இந்திய அணி Away Team

இந்தியா - ஆப்கானிஸ்தான் T20I தொடருக்கு ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக Host Team ஆக உள்ளது. இதனை பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளன. அதாவது, போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றாலும், இந்த தொடரை நடத்தும் Home Team என்ற அந்தஸ்து ஆப்கானிஸ்தானுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி Away Team ஆக கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் ஏன் இந்தியாவில் Home Series விளையாடுகிறது?

இதற்கு முக்கிய காரணம், ஆப்கானிஸ்தான் தனது சொந்த நாட்டில் சர்வதேச போட்டிகளை தொடர்ந்து நடத்துவதில் இருக்கும் சவால்கள்தான். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆப்கானிஸ்தான் தனது Home மேட்ச் அனைத்தையும் வெளிநாட்டு மைதானங்களில் நடத்தி வருகிறது. கடந்த காலங்களிலும் ஆப்கானிஸ்தான் தனது Home போட்டிகளை இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடத்தி உள்ளது. இதன் மூலம் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு வகையில் Neutral Home Venue ஆக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு டெல்லியில் உள்ள டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடரை நடத்த முடிவு செய்தனர். அதன்படி தற்போது போட்டியும் நடந்து வருகிறது.

இந்த தொடரில் இந்தியா Away Team என கருதப்படுவதால், சில போட்டி நடைமுறைகளிலும் அதற்கான மாற்றங்கள் இருக்கும். பொதுவாக Home Team-ன் கேப்டன்தான் டாஸ் நாணயத்தை சுண்டுவார். இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் Home Team என்பதால், ஆப்கானிஸ்தான் கேப்டனுக்கே அந்த உரிமை வழங்கப்படுகிறது.

அதேபோல் டெல்லி மைதானத்தில் இந்திய அணி வழக்கமான Home Dressing Room-ஐ பயன்படுத்தாமல், Away Team-க்கான Dress Room-ஐ பயன்படுத்துகிறது.

டெல்லி மைதானம் ஆப்கானிஸ்தானின் ஹோம் கிரவுண்டா?

ஆம், இந்த டி20 தொடரை பொறுத்தவரையில், டெல்லியின் அருண் ஜெட்லி மைதானம் ஆப்கானிஸ்தானின் சொந்த மைதானமே. தனது நாட்டில் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்ற நாடுகளில் தொடரை நடத்தி வருகிறது. அப்படிதான் இத்தொடரையும் பிசிசிஐயிடம் பேசி அவர்கள் நடத்துகிறார்கள். அதனால் இத்தொடர் முடியும் வரை டெல்லி அருண் ஜெட்லி மைதானம் அவர்களின் சொந்த மைதானமாக கருதப்படும்.

ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் இந்தியா போன்ற சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் வசதிகள் கொண்ட நாட்டில் போட்டிகளை நடத்துவதன் மூலம் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தேவையான ஏற்பாடுகளையும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது.

Home Team, Away Team எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

ஒரு நாட்டில் போட்டி நடக்கிறது என்பதற்காக அந்த நாட்டை சேர்ந்த கிரிக்கெட் அணிதான் Home Team என்று அர்த்தம் இல்லை. குறிப்பிட்ட தொடரை எந்த அணி நடத்துகிறது என்பதுதான் முக்கியம். அதன்படியே, Home Team தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலும், அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம்தான் போட்டிகளை நடத்தும். ஆனால் சில நேரங்களில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் வைத்திருக்கும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொடரை அவர்கள் நடத்த முடிவு செய்கின்றனர்.

தற்போது ஆப்கானிஸ்தான் வேறு நாடுகளில் தனது Home Series போட்டிகளை நடத்துவதுபோல, முன்பு பாகிஸ்தானும் தொடர்ந்து நடத்தி வந்தது. அவர்கள் அதிகமாக துபாய் மைதானங்களை தனது சொந்த மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இதற்கு முக்கிய காரணம், கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட பயங்கர வாத தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தன. இதனால் வேறு வழியின்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் துபாய் சர்வதேச மைதானம், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மைதானங்களை சர்வதேச போட்டிகளை நடத்தி வந்தது. தற்போது ஆப்கானிஸ்தானும் பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற நாடுகளில் தங்களின் Home Series-ஐ நடத்தி வருகின்றனர்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket