SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சேப்பாக்கம் வந்த அஜித் அகர்கர்... திடீர் விசிட்டுக்கு என்ன காரணம்...?

Duleep Trophy Final 2026: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் துலீப் டிராபி 2026 பைனலை பார்ப்பதற்கு இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வருகை தந்துள்ளார். அவர் சென்னை வந்த காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Sep 06, 2026, 21:26 IST | Updated: Sep 06, 2026, 21:33 IST
Image Credit: Duleep Trophy 2026 | Image Source : X/@BCCIDomestic
Join

Duleep Trophy Final 2026: துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 6) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது.

இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டலம் அணி, திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டலம் அணியுடன் பைனலில் மோதுகிறது. டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சேப்பாக்கத்தில் களைகட்டிய கூட்டம்

பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி என்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். அதுவும் மதியத்திற்கு மேல் செல்லலாம் என நினைத்தவர்கள் முதலில் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்கிறார் என்பதால் காலையிலேயே கூட்டம் வந்துவிட்டது.

ஆரம்பத்தில் C, D, E Lower மட்டுமே அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டத்தால் C, D, E Upper அரங்குகளும் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டன. சிராஜ் முதல் ஓவரை வீசினார். சேப்பாக்கமே அதிரும் அளவுக்கு வரவேற்பு இருந்தது.

சூர்யவன்ஷியின் அதிரடி தொடக்கம்

துலீப் டிராபி பைனலில், முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம் அணி அதிரடியாக ரன்களை குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி சிராஜை வச்சு செய்தார். அதுவும் சிராஜ் வீசிய 7வது ஓவரில் 4, 6, 4 என 14 ரன்களை குவித்து சூர்யவன்ஷி அசத்தினார். அப்போது 24 பந்துகளில் 34 ரன்களை அடித்திருந்தார். ஆனால் ஸ்பின்னர் அட்டாக்கிற்கு வந்ததும் அவர் சைலண்ட் ஆகிவிட்டார்.

வைலண்டான அபிமன்யூ ஈஸ்வரன்

சூர்யவன்ஷி சைலண்ட் ஆனதும் அபிமன்யூ ஈஸ்வரன் வைலண்ட் ஆனார். அதுவரை 18 பந்துகளில் 11 ரன்களையே அவர் அடித்திருந்தார். ஆப் ஸ்பின்னர் திரிபுராண விஜய் சூர்யவன்ஷியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். ஆனால் ஈஸ்வரன் பவுண்டரிகளை அடுத்தடுத்து பறக்கவிட்டார். ஒரு சிக்ஸரையும் இறங்கி வந்து லாங் ஆன் திசையில் அடித்திருந்தார்.

சுழலில் சொதப்பும் சூர்யவன்ஷி

சூர்யவன்ஷி தொடர்ந்து அமைதியாகவே இருக்க, ஈஸ்வரன் 46வது பந்தில் அரைசதம் அடித்தார். ஸ்பின்னர்களை மட்டுமின்றி வேகப்பந்துவீச்சையும் சிறப்பாகவே எதிர்கொண்டார். 14.3 ஓவரில் 100 ரன்களை ஓபனிங் ஜோடி அடித்தது. ஸ்பின்னர்களால் நீண்ட நேரம் அமைதியாக இருந்த வைபவ் சூர்யவன்ஷி, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாமா மிலிந்தை அட்டாக் செய்ய சென்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். 37 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய திணறியதால் சூர்யவன்ஷி கடைசி 20 பந்துகளில் வெறும் 10 ரன்களை அடித்திருந்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஷிகர் மோகன் என்ற இடதுகை பேட்டர் உள்ளே வந்தார். சூர்யவன்ஷி ஆட்டமிழந்ததும் ரன் வேகமும் குறைந்தது. முதல் செஷன் முடிவதற்கு ஓரிரு ஓவர்கள் முன்னர், அபிமன்யூ ஈஸ்வரன் அவசரப்பட்டு ரன் அவுட்டானார். அவர் 10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 86 பந்துகளில் 72 ரன்களை அடித்தார்.

இஷான் கிஷன் சதம்

அடுத்து 2வது செஷனின் ஆரம்பத்தில் சுதிப் குமார் கராமி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது செஷன் முடிவதற்கு சில ஓவர்களுக்கு முன் சதம் நோக்கி சீறிப்பாய்ந்து வந்த ஷிகர் மோகன் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷன் - குமார் குஷாக்ரா சிறப்பாக ரன்களை குவித்தனர்.

இஷான் கிஷன் சதம் கடந்தார், குமார் குஷாக்ரா அரைசதம் கடந்தார். இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கிழக்கு மண்டலம் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்துள்ளது. இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குமார் குஷாக்ரா 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 80வது ஓவருக்கு பின் புதிய பந்தை தெற்கு மண்டலம் எடுத்ததும், ரன்களும் குவிய வாய்ப்புள்ளது, விக்கெட் சரியவும் வாய்ப்புள்ளது.

சிராஜ் சொதப்பல்

தெற்கு மண்டலம் அணி இன்று சுமாராகவே பந்துவீசியது. காலிறுதியிலும், அரையிறுதியிலும் தெற்கு மண்டல அணிக்கு முதுகெலும்பாக இருந்தது வேகப்பந்துவீச்சாளர் வித்வத் கவேரப்பா. அவர் இல்லாத சூழலில் புதிய பந்தில் தெற்கு மண்டலம் அணி அதிக ரன்களை கொடுத்துவிட்டது. சிராஜ் 14 ஓவர்கள் வீசிய 96 ரன்களை கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை. இன்று சீரற்ற வகையில் அவர் பந்துவீசியதால் ரன்கள் அதிகம் கசிந்தது.

அகர்கர் வந்த காரியம்

இப்போட்டியை காண சென்னை சேப்பாக்கத்திற்கு ஆடவர் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வருகை தந்தார். அடுத்து இந்தியா ஏ அணி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்தியா ஏ அணிக்கு தேர்வு செய்யப்படலாம். எனவே, அகர்கரின் வருகை கவனம் பெற்றுள்ளது.

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஆஸ்திரேலிய ஏ அணியும் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. எனவே, இந்திய ஏ அணியை பலப்படுத்த அகர்கர் விரும்புவார். இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை தெற்கு மண்டல அணியில் சாமா மிலிந்த் இந்திய ஏ அணிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

காரணம், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குறைவு என்பதால் சாமா மிலிந்தின் கண்ட்ரோல் நிச்சயம் நியூசிலாந்தில் பெரியளவில் கைக்கொடுப்பார். சாமா மிலிந்த் இன்று 13 ஓவர்களை வீசி 1 மெய்டன் உள்பட 56 ரன்களை கொடுத்து, 2 விக்கெட்டை எடுத்தார். குறிப்பாக, சூர்யவன்ஷி, ஷிகர் மோகன் ஆகிய செட் பேட்டர்களின் விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜடேஜா இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர்.. இன்னும் 2 வீரர்களுக்கும் டார்கெட்! CSK மெகா பிளான்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES