SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்திய அணியில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு... பிரசித் கிருஷ்ணா விலகல்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஓடிஐ போட்டியில் இருந்து பிரசித் கிருஷ்ணா விலகி உள்ளார். அதேபோல், டி20ஐ தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த இருவருக்கும் பிசிசிஐ மாற்று வீரரை அறிவித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 02, 2026, 08:20 AM IST | Updated: Oct 02, 2026, 08:29 AM IST
Join

IND vs WI, ODI & T20I Squad Changes : மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று ஓடிஐ மற்றும் ஐந்து டி20ஐ தொடர்களில் இரு அணிகளும் மோதுகின்றன.

இதுவரை இரண்டு ஓடிஐ போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரண்டிலும் இந்திய அணி வெற்றிபெற்று ஓடிஐ தொடரை கைப்பற்றியது. நாளை (அக். 3) முலான்பூர் நகரில் நடைபெற இருக்கும் மூன்றாவது ஓடிஐ போட்டியையும் வென்று தொடரை வைட்வாஷ் செய்ய இந்திய அணி விரும்பும்.

இதையடுத்து, அக்டோபர் 6ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதிவரை இரு அணிகளுக்கும் இடையிலான டி20ஐ தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே ஆசிய விளையாட்டுத் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20ஐ அணி நாளை இறுதிப்போட்டியில் மோத இருக்கிறது.

மேலும் படிக்க | CSK-வின் புதிய பெளலிங் கோச் இவர்தான்.. ஜாகீர் கான் முடிவுக்கு ஓகே?

பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம்

இந்தச் சூழலில், நாளை நடைபெற இருக்கும் 3வது ஓடிஐ போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு 2வது போட்டியின்போது இடது தொடை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அந்த போட்டியில் அவர் 5 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தார்.

அன்சுல் கம்போஜிற்கு வாய்ப்பு

இந்நிலையில், பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக அன்சுல் கம்போஜை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. தற்போது அன்சுல் கம்போஜ் புதுச்சேரியில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.

இப்போட்டி இன்றுடன் நிறைவடையும் நிலையில், அன்சுல் கம்போஜ் உடனடியாக முலான்பூர் சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்சுல் கம்போஜ் நிச்சயம் நாளைய போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | 11 வீரர்களை கழட்டிவிடும் CSK? சாய் கிஷோரை டிரேட் செய்ய திட்டம்.. மெகா பிளான்!

ஒரே ஒரு போட்டியில் விளையாடிய அன்சுல்...

அன்சுல் கம்போஜ் இதுவரை ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். கடந்தாண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார்.

நமன் திருக்கு கிடைத்த வாய்ப்பு

அதேபோல், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் இந்திய ஸ்குவாடில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் நமன் திர் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு தொடர் மூலம் ஓடிஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்ட நமன் திர், தற்போது டி20ஐ வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.

இதன்மூலம், இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் சமநிலையை அடைந்துள்ளது எனலாம். தற்போது ஓய்வு கிடைத்திருப்பதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் முழுமையாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தன்னை தயார்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய இந்திய ஓடிஐ ஸ்குவாட்: சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் திர், அன்சுல் கம்போஜ்.

தற்போதைய இந்திய டி20ஐ ஸ்குவாட்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், நமன் திர். 

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இந்த 3 விஷயங்களை மாற்ற ஜாகீர் கான் அதிரடி திட்டம்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES