SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK அணிக்கு பென் ஸ்டோக்ஸ் ஏன் சரியான ஆப்ஷன்...? எவ்வளவு கோடி வரை ஏலம் கேட்கலாம்? Explained

ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பதிவு செய்துள்ளார். 2023இல் சிஎஸ்கே இவரை அதிக தொகை கொடுத்து எடுத்தது. தற்போது பென் ஸ்டோக்ஸ் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு வருவாரா?, அவர் வருவதால் சிஎஸ்கேவுக்கு என்ன நல்லது?, எவ்வளவு தொகை வரை சிஎஸ்கே ஏலம் கேட்கலாம்? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 25, 2026, 16:05 IST | Updated: Nov 25, 2026, 16:19 IST
Image Credit: Ben Stokes in IPL 2027 Mini Auction | AI Generated Image : ChatGPT
Join

CSK - Ben Stokes, IPL 2027 Mini Auction: ஐபிஎல் 2027 தொடரை முன்னிட்டு வரும் டிசம்பர் 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது. 10 அணிகளும் சேர்த்து 66 வீரர்கள் வரை எடுக்கலாம், அதில் 25 வீரர்கள் வரை வெளிநாடு வீரர்களை எடுக்கலாம்.

இந்தச் சூழலில், வெளிநாட்டு Capped வீரர்கள், வெளிநாட்டு Uncapped வீரர்கள், இந்திய Capped வீரர்கள், இந்திய Uncapped வீரர்கள் என 1,220 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர்.

அதில் 939 பேர் இந்தியர்கள் என்றும்; 281 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அதிலும் 170 Capped வெளிநாட்டு வீரர்கள், 42 அசோசியேட் நாடுகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தச் சூழலில், ஐபிஎல் மினி ஏலத்திற்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், நட்சத்திர ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் மினி ஏலத்திற்கு பதிவு செய்துள்ளது கவனத்திற்குள்ளாகி உள்ளது.

மேலும் படிக்க | IPL மினி ஏலம்: பதிவு செய்த 1,120 வீரர்கள்... கவனம் ஈர்த்த முக்கிய வீரர்கள் - ஹைலைட்ஸ்

ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ்...

ஓய்வுக்கு பின் பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் கடந்த ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். அடுத்து ஆஸ்திரேலியாவின் BBL தொடரில் விளையாட இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஐபிஎல் ஏலத்திற்கும் பதிவு செய்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவுக்கு ஏன் தேவை?

மேலும் படிக்க | ரோகித் சர்மாவுக்கு மாற்றாக 24 வயது வீரர்.. ரூ. 10 கோடிக்கு வாங்க மும்பை திட்டம்!

சிஎஸ்கேவின் காம்பினேஷன்

பென் ஸ்டோக்ஸ் வந்தால் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் எப்படி மாறும் என்பதன் கணிப்பை இங்கு காணலாம்.

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே,  ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்),  பென் ஸ்டோக்ஸ், டெவால்ட் பிரிவிஸ், ஷிவம் தூபே, லிவிங்ஸ்டன் / ஓவர்டன், நூர் அகமது, அன்சுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், இந்திய வேகப்பந்துவீச்சாளர். இம்பாக்ட் வீரர்: உர்வில் பட்டேல் / கார்த்திக் சர்மா.

சிஎஸ்கே எவ்வளவு தொகை வரை போகலாம்?

பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில், பந்துவீசும்பட்சத்தில் சிஎஸ்கே அவரை நிச்சயம் எடுக்கலாம். சிஎஸ்கேவிடம் ரூ.28.05 கோடி உள்ளது. ஸ்டோக்ஸை எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் முயற்சிக்கும். கொல்கத்தாவும் ஓரளவு முயற்சிக்கும்.

எனவே, ஸ்டோக்ஸ் 15 கோடிக்குள் கிடைத்தால் சிஎஸ்கேவுக்கு நல்லது. ஸ்டோக்ஸ் ரூ.15 கோடி, இந்திய வேகப்பந்துவீச்சாளருக்கு ரூ.8 கோடி - ரூ.10 கோடி வரை, சிஎஸ்கே தொகையை ஒதுக்கினாலே போதும், நல்ல காம்பினேஷனை அமைத்துவிடலாம்.

மேலும் படிக்க | CSK Trade: ரூ. 10 கோடிக்கு தரமான ஆல்-ரவுண்டர்.. குஜராத் உடன் ஓகேயான டீல்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES