SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK: 19 வயது வீரருக்கு குறி.. யார் அவர்? கம்பேக் கொடுக்க தோனி - ஜாகீர் மாஸ்டர் பிளான்!

CSK Latest News: சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்த 19 வயது வீரர் ஒருவரை வாங்க தோனி மற்றும் ஜாகீர் கான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் அவர்? தரமான கம்பேக் கொடுக்க நிர்வாகம் என்ன திட்டமிட்டு வருகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இங்கு விரிவாக பார்ப்போம்.

Written By R Balaji
Published: Nov 27, 2026, 15:35 IST | Updated: Nov 27, 2026, 15:40 IST
Join

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக 2023 ஆம் ஆண்டில் ஐபிஎல் கோப்பையை வென்றது. இதையடுத்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் கூட எட்ட முடியாத நிலையில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பையை வென்ற அணி கடுமையாக சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

இதற்காக சிஎஸ்கே நிர்வாகமும் அணியை தயார் செய்வதில் தீவிரம் காட்டியும் வருகிறது. முதற்கட்டமாக புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமித்தனர். இதையடுத்து ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற தோனியை அணியின் மெண்ட்டாராக நியமித்தனர். அதோடு சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்கு தங்களிடம் இருந்த கலீல் அகமது, நேதன் எல்லீஸை கொடுத்துவிட்டு லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோரை பெற்றுக்கொண்டது.

19 வயது இளம் வீரரை வாங்க திட்டம்

தொடர்ந்து அணிக்கு தேவைப்படும் வீரர்களை கண்டறித்து அவர்களை பெறும் முயற்சியில் இருந்து வருகிறது சிஎஸ்கே நிர்வாகம். இதற்கிடையில், நவம்பர் 17 ஆம் தேதி சிஎஸ்கே நிர்வாகம் அணியில் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில், மிடில் ஆர்டரை பலப்படுத்த 19 வயது இளம் வீரரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது மகாராஷ்டிராவை சேர்ந்த அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சஹில் பராக்கை வாங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாம். இடது கை பேட்டரான இவர், மிடில் ஆர்டரில் 180க்கு அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய கூறியவராம். இவர் இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடி 324 ரன்கள் அடித்துள்ளார். 181 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இந்த ரன்களை அடித்துள்ளார். மொத்தம் 41 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களை அடித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை

கடந்த ஐபிஎல் சீசனில் சஹில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தார். ஆனால் ஆங்கு அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 4 போட்டிகளில்தான் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியாக ஆட வாய்ப்பு கிடைக்காததால் அவரால் ரன்களையும் குவிக்க முடியவில்லை. ஒரு போட்டியில் அதிகபட்சமாக 24 ரன்களையே அவரால் சேர்க்க முடிந்தது.

சிஎஸ்கே வரும் சஹில் பராக்

சஹில் பராக்கிற்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கும் பட்சத்தில் அவரால் ரன்களை குவிக்க முடியும் என சிஎஸ்கே நிர்வாகம் நம்புகிறது. குறிப்பாக, மெண்ட்டார் தோனியின் கீழ் அவரால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை ருதுராஜ் கெய்க்வாட்தான் பரிந்துரை செய்தாராம்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு டார்கெட்

தற்போது நடந்து வரும் சையத் முஷ்டாக் அலி தொடரை சிஎஸ்கே நிர்வாகம் கூர்ந்து கவனித்து வருகிறதாம். இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை டார்கெட் செய்து அவர்களை அணிக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம். அதேசமயம் இனி இளம் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

இது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் மற்றும் மெண்ட்டார் தோனி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்களாம்.

சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள் யார் யார்?

அன்ஷுல் கம்போஜ், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், குர்ஜப்னீத் சிங், ஜேமி ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, நூர் அகமது, ராமகிருஷ்ண கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், சிவம் துபே, உர்வில் படேல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜாக் எட்வர்ட்ஸ், கார்த்திக் ஷர்மா, அகேல் ஹொசைன், ராகுல் சாஹர், ஷ்ரேயாஸ் கோபால்.

சிஎஸ்கே விடுவித்த வீரர்கள் யார் யார்?

எம்எஸ் தோனி (ஓய்வு பெற்றார்), நாதன் எல்லிஸ், கலீல் அகமது, மத்தேயு ஷார்ட், மாட் ஹென்றி, சாக் ஃபோல்க்ஸ், பிரசாந்த் வீர், அமன் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் மத்வால், டியான் ஃபாரெஸ்டர், மக்னீல் நோரோன்ஹா. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES