• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /GST பதிவு இல்லாதவரிடம் பொருள் வாங்கினாலும் இ-இன்வாய்ஸ் போட வேண்டும்: புதிய விதி என்ன?

GST பதிவு இல்லாதவரிடம் பொருள் வாங்கினாலும் இ-இன்வாய்ஸ் போட வேண்டும்: புதிய விதி என்ன?

GST E Invoice Rule : வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பாக 2027 ஜனவரி 1 முதல் GST இ-இன்வாய்ஸ் விதிகளில் அதிரடி மாற்றம் வர உள்ளது. இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 27, 2026, 15:37 IST|Updated: Nov 27, 2026, 15:49 IST
joinshare
GST பதிவு இல்லாதவரிடம் பொருள் வாங்கினாலும் இ-இன்வாய்ஸ் போட வேண்டும்: புதிய விதி என்ன?
Image Credit: GST E Invoice Rule

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
GST பதிவு இல்லாதவரிடம் பொருள் வாங்கினாலும் இ-இன்வாய்ஸ் போட வேண்டும்: புதிய விதி என்ன?

GST பதிவு இல்லாதவரிடம் பொருள் வாங்கினாலும் இ-இன்வாய்ஸ் போட வேண்டும்: புதிய விதி என்ன?

2

CSK: 19 வயது வீரருக்கு குறி.. யார் அவர்? கம்பேக் கொடுக்க தோனி - ஜாகீர் மாஸ்டர் பிளான்!

3

திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம்.. பக்தர்களுக்கு அனுமதி.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்

4

வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!

5

TN Rain Alert: நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

GST E Invoice Rule : தமிழ்நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையின் கீழ் வணிகம் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில், இ-இன்வாய்ஸ் விதிகளில் தமிழக அரசு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில் நவம்பர் 12 ஆம் தேதி அன்று சிறப்பு அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | திருச்சி : பழங்குடியினர், நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

இதுவரை நடைமுறையில் இருந்த பழைய விதி என்ன?

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி விதிகள், 2017-ன் கீழ், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, குறிப்பிட்ட இரண்டு பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இ-இன்வாய்ஸ் உருவாக்குவது கட்டாயமாக இருந்தது. அதாவது, ஜிஎஸ்டி பதிவு செய்த நபருக்குப் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும்போதும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும் மட்டுமே இ-இன்வாய்ஸ் போட வேண்டியிருந்தது. மற்ற பரிவர்த்தனைகளுக்கு இது கட்டாயமாக்கப்படவில்லை.  

புதிய அரசாணையின்படி இ-இன்வாய்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள 4 பிரிவுகள்

புதிய திருத்தத்தின் மூலம் பழைய விதி மாற்றப்பட்டு, இனி கீழ்க்கண்ட நான்கு விதமான பரிவர்த்தனைகளுக்கும் இ-இன்வாய்ஸ் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது:

பதிவு செய்த நபருக்கு வழங்கும் சப்ளை: ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போலவே, ஜிஎஸ்டி பதிவு பெற்ற மற்றொரு வியாபாரி அல்லது நிறுவனத்திற்குப் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும்போது இ-இன்வாய்ஸ் போட வேண்டும்.

ஏற்றுமதி: வெளிநாடுகளுக்குப் பொருட்கள் அல்லது சேவைகளை ஏற்றுமதி செய்யும்போது இ-இன்வாய்ஸ் கட்டாயமாகும்.

ரிவர்ஸ் சார்ஜ் சப்ளை: இது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள மிக முக்கிய விதியாகும். ஜி.எஸ்.டி பதிவு செய்யாத ஒரு நபரிடமிருந்து பொருள் அல்லது சேவையைப் பெற்று, அதற்குப் பெறுநரே ரிவர்ஸ் சார்ஜ் முறையில் வரி செலுத்த வேண்டியிருந்தால், அதற்கும் இனி இ-இன்வாய்ஸ் உருவாக்க வேண்டும். உதாரணமாக, பயன்படுத்திய சமையல் எண்ணெய், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், மின்னணுக் கழிவுகள் போன்றவற்றைப் பதிவு செய்யாதவரிடம் இருந்து வாங்கி வரி செலுத்தும் நிறுவனங்கள் இனி கட்டாயம் இ-இன்வாய்ஸ் போட வேண்டும்.

சேவைகள் இறக்குமதி: வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் அல்லது நபர்களிடமிருந்து மென்பொருள், ஆலோசனை, வடிவமைப்பு போன்ற சேவைகளை இறக்குமதி செய்து பயன்படுத்தும்போதும், அதற்கும் இ-இன்வாய்ஸ் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

வியாபாரிகளுக்கு இதனால் கிடைக்கும் நன்மைகள்

இந்தப் புதிய நடைமுறை வியாபாரிகளுக்கு ஆரம்பத்தில் சற்று கூடுதல் பணியாகத் தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பல நன்மைகளைத் தருகிறது. அனைத்துப் பரிவர்த்தனைகளும் அரசின் இணையதளத்தில் நேரடியாகப் பதிவாவதால், வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து போலி பில்கள் உருவாக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், ரிவர்ஸ் சார்ஜ் மற்றும் இறக்குமதி சேவைகளுக்கு முறையாக இ-இன்வாய்ஸ் உருவாக்கப்படும்போது, அதற்கான உள்ளீட்டு வரி வரவை எவ்விதத் தடையுமின்றி எளிதாகப் பெற முடியும். வரித் தாக்கலின் போது ஏற்படும் கணக்குப் பிழைகள் தவிர்க்கப்படுவதால், எதிர்காலத்தில் வணிக வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

அமலாகும் தேதி மற்றும் வியாபாரிகள் கவனிக்க வேண்டியவை

தமிழக அரசின் இந்தப் புதிய அறிவிப்பு 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதி நடைமுறைக்கு வர இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ளதால், இ-இன்வாய்ஸ் வரம்பிற்குள் வரும் வியாபாரிகள் தங்களது கணக்கியல் மென்பொருள்களை உடனடியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனவரி 1 -க்குப் பிறகு ரிவர்ஸ் சார்ஜ் மற்றும் இறக்குமதி சேவைகளுக்கு இ-இன்வாய்ஸ் உருவாக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட பில்கள் செல்லாததாகக் கருதப்பட்டு உள்ளீட்டு வரி வரவு  மறுக்கப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும் சூழலும் ஏற்படும் என்பதால் வியாபாரிகள் இப்போதே தயாராவது அவசியமாகும்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu