• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி.. மகளிர் அணிக்கு தங்கம், ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி.. மகளிர் அணிக்கு தங்கம், ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தி உள்ளது. அதேசமயம் இந்திய ஆண்கள் அணி ஜப்பான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

Written ByR Balaji
Published: Sep 22, 2026, 02:23 PM IST|Updated: Sep 22, 2026, 02:28 PM IST
joinshare
இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி.. மகளிர் அணிக்கு தங்கம், ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

3

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

4

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

5

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் கிரிக்கெட் விளையாட்டில் இந்திய மகளிர் அணி பங்கேற்று விளையாடியது. கால் இறுதி போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் அரையிறுதி போட்டியில் வங்கதேச அணியை 114 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றியை பெற்று இறுதி போட்டியில் இலங்கை அணியை இன்று எதிர்கொண்டு இப்போட்டியில் 147 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து தங்கத்தை வென்றுள்ளது இந்திய அணி.

இலங்கைக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் இருந்த மந்தனா 45 பந்துகளில் 79 ரன்களை குவித்து அசத்தினார்.

இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சற்று தடுமாறிய நிலையில், 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ரன்கள் அடித்து அதிரடி காட்டி இந்திய அணி 200 ரன்களை கடக்க உதவினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பில் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி, சாமுதி பிரபோதா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து இலங்கை அணி 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கடுமையாக தடுமாறியது. தொடக்க வீராங்கனை கேப்டன் சாமரி அதபத்து மட்டுமே 29 ரன்களை அடித்தார். இதையடுத்து கௌஷானி நுத்யங்கனா 14, கவிஷா தில்ஹரி 11 ரன்களும் அடித்தனர். இந்தியாவின் வீராங்கனை தீப்தி சர்மா 3, ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதனால் இலங்கை அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சொதப்பியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டில் தனது முதல் தங்கத்தை வென்றுள்ளது.

நூலிழையில் தப்பித்த இந்திய ஆண்கள் அணி

இந்திய அணிகள் அணி இன்று காலிறுதி போட்டியில் ஜப்பானுக்கு எதிராக விளையாடியது. மழையின் காரணமாக இப்போட்டி தாமதமாகவே தொடங்கியது. இதனால் 20 ஓவர்கள் கொண்ட போட்டி 5 ஓவர்களுக்கு மாற்றப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்கள் 5 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 32 ரன்கள் மட்டுமே அடித்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களான சஞ்சு சாம்சன் 9, அபிஷேக் சர்மா 0, இஷான் கிஷன் 3 ரன்கள் என சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து, ஜப்பான் அணி 33 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. சொல்லப்போனால் ஜப்பான் அணி கொஞ்சம் சிறப்பாகவே விளையாடியது. இலக்கை நெருங்கி வந்த நிலையில், இறுதி ஓவரை அக்சர் படேல் சிறப்பாக வீசிய நிலையில், இப்போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket