SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பதிரானாவை மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பாக தூக்கும்... 3 காரணங்கள் இதோ

IPL 2027 Mini Auction: ஐபிஎல் மினி ஏலத்தில் மதீஷா பதிரானாவை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி அதிகம் முயற்சிக்கும். பதிரானாவுக்கு ஏன் மும்பை இந்தியன்ஸ் அணி சரியாக இருக்கும்?, பதிரானாவை எடுக்க வேறு எந்த அணிகள் முந்தும்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 21, 2026, 00:44 IST | Updated: Nov 21, 2026, 00:53 IST
Image Credit: Matheesha Pathirana, Mumbai Indians | AI Generated Image : ChatGPT
Join

IPL 2027 Mini Auction, Matheesha Pathirana: ஐபிஎல் தொடரின் 20வது சீசன் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு கடந்த நவம்பர் 17ஆம் தேதி அன்றே 10 அணிகளும் தங்களின் தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்தன. தொடர்ந்து ஒவ்வொரு அணிகளும் ஏலத்திற்கான தங்களின் வியூகத்தை வகுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தோனி Farewell Match ஆடாதது ஏன்? ஓய்வு முடிவுக்கான காரணத்தை சொன்ன ரெய்னா!

பதிரானாவை ரிலீஸ் செய்த கேகேஆர்

அந்த வகையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிதான் அதிக தொகையுடன் (ரூ.47.45 கோடி) மினி ஏலத்திற்கு செல்ல இருக்கிறது. அதற்கடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் அதிக தொகையை (ரூ.41.65 கோடி) கையிருப்பில் வைத்திருக்கிறது.

கொல்கத்தா அணியை பொருத்தவரை ரூ.25.20 கோடி கொண்ட கேம்ரூன் கிரீனை அந்த அணி விடுவிக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை கேகேஆர் தக்கவைத்திருக்கிறது. அவரை தக்கவைத்தே கேகேஆர் அணியிடம் ரூ.41.65 கோடி உள்ளது. அதற்கு காரணம் அதிக தொகை கொண்ட பதிரானா (ரூ.18 கோடி), முஸ்தபிஷுர் ரஹ்மான் (ரூ.9.20 கோடி) ஆகியோரை அந்த அணி விடுவித்துள்ளது.

பதிரானாவுக்கு மவுஸ் குறையவில்லை

இப்படியிருக்க, பல அணிகளுக்கு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை இருக்கிறது. குறிப்பாக, அதிக தொகை கொண்டிருக்கும் லக்னோ, கேகேஆர் அணிகளுக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை இருக்கிறது.

அப்படியிருக்க, ஸ்லிங் ஆக்ஷன் பந்துவீச்சை கொண்ட பதிரானா பிட்னஸ் உடன் இருக்கும்பட்சத்தில் இந்த மினி ஏலத்திலும் அவருக்கு அதிகளவில் கோடிகள் கொட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் குறைந்த அளவிலான வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால் பதிரானாவின் வித்தியாசமான ஆக்ஷனும், அவரது டெத் ஓவர் பங்களிப்பும் நிச்சயம் அவரை கவனிக்க வைக்கும்.

ஐபிஎல் தொடரில் பதிரானா

ஐபிஎல் தொடரில் பதிரானா 33 இன்னிங்ஸில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதிகபட்சமாக 2023ஆம் ஆண்டில் சிஎஸ்கேவில் இருந்த போது 12 இன்னிங்ஸில் 19 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அந்த ஆண்டில்தான் சிஎஸ்கே 5வது கோப்பையையும் வென்றது.

காயத்தால் முடங்கிய பதிரானா

இருப்பினும், பதிரானா கடந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார், அதிலும் விக்கெட் எடுக்கவில்லை. காயம் காரணமாக முழு தொடரிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. பதிரானா கடைசியாக விளையாடியதும் ஐபிஎல் தொடரில்தான்.

அதற்கு பின் எந்தவொரு சர்வதேச போட்டியிலோ, லீக் தொடரின் போட்டியிலோ அவர் விளையாடவே இல்லை. அதுதான் பிரச்னை. அப்படியிருக்க, பதிரானாவை எடுக்க மற்ற அணிகள் நிச்சயம் அதிகளவில் யோசிக்கும். கேகேஆர் அணி கூட குறைந்த தொகையில் அவரை மீண்டும் எடுக்க அதிகம் யோசிக்கும். சிஎஸ்கே எடுக்க ஓரளவு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | IPL 2027: எந்த அணியிடம் எவ்வளவு பணம்? ஐபிஎல் மினி ஏலம் எங்கு, எப்போது? Explained

பதிரானாவும்... மும்பை இந்தியன்ஸ் அணியும்...

இருந்தாலும், பதிரானாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் மட்டுமே சரியான அணியாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பும்ரா, அர்ஷ்தீப் என இரண்டு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் செட்டாகிவிட்டனர். அஸ்வானி குமார், ஷர்துல் தாக்கூர் என இந்திய பேக்-அப் பௌலர்களும் உள்ளனர்.

டிரன்ட் போல்ட் மற்றும் தீபக் சஹார் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிட்டிருக்கிறது. இதனால், அந்த அணிக்கு ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவையிருக்கிறது.

ஏன் மும்பை சரியான டீம்...?

மலிங்கா போல் பந்துவீசும் பதிரானாவை எடுக்க மும்பை கண்டிப்பாக முயற்சிக்கும் என தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் பிட்னஸில் அதிக அக்கறை காட்டும். மேலும், அவர்களின் மருத்துவக் குழு மற்றும் பிஸியோதெரபி குழு ஐபிஎல் தொடரிலேயே சிறந்த ஒன்று என்ற பேச்சும் அதிகம் இருக்கிறது.

பதிரானாவை எடுக்குமா மும்பை?

அப்படியிருக்க, பதிரானாவின் பிட்னஸ் பிரச்னையை மும்பை இந்தியன்ஸ் அணியால் கவனித்துக்கொள்ள இயலும். பதிரானாவின் தேவையும் மும்பைக்கு இருக்கிறது. எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி தனது கையிருப்பில் ரூ.32.50 கோடியை வைத்திருப்பதால் நிச்சயம் ரூ.15 கோடி வரை சென்று கூட பதிரானாவை எடுக்கலாம், தேவைப்பட்டால் அதை தாண்டியும் கூட மும்பை முயற்சிக்க வாய்ப்புள்ளது. மும்பை அணி பதிரானாவை எடுக்க 3 முக்கிய கா்ரணங்களை இங்கு காணலாம்.

3 முக்கிய காரணங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

பதிரானாவை மீண்டும் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடுமையாக போராடலாம். எனவே, பதிரானாவுக்காக மும்பை - சிஎஸ்கே அணிகளுக்கு இடையே இந்த மினி ஏலத்தில் போட்டாப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க | IPL 2027: கையில் ரூ. 28 கோடி.. CSK டார்கெட் செய்யும் 8 வீரர்கள்? யார் யார் பாருங்க!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES