SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Duleep Trophy 2026: கப் அடித்த கிழக்கு மண்டலம்... ஆட்ட நாயகன், தொடர் நாயகன் யார் யார்?

Duleep Trophy 2026: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியை வீழ்த்தி, கிழக்கு மண்டல அணி கோப்பையை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு மண்டலம் துலீப் டிராபியை வென்றுள்ளது.

Written By Sudharsan G
Published: Sep 10, 2026, 14:40 IST | Updated: Sep 10, 2026, 15:38 IST
Image Credit: East Zone Won Duleep Trophy 2026 Championship | AI Generated Image : ChatGPT
Join

Duleep Trophy 2026, East Zone Won Championship: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப்போட்டியில் திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டல அணியை வீழ்த்தி, இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி கோப்பையை வென்றது.

2011-12, 2012-13 சீசன்களுக்கு பின்னர் சுமார் தற்போதைய 2026-27 துலீப் டிராபியை கோப்பை கிழக்கு மண்டலம் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது.

மேலும் படிக்க | சேப்பாக்கம் வந்த அஜித் அகர்கர்... திடீர் விசிட்டுக்கு என்ன காரணம்...?

ஆட்ட நாயகன், தொடர் நாயகன்

முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் & 2வது இன்னிங்ஸில் 80 ரன்களை அடித்த கிழக்கு மண்டல அணி கேப்டன் இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதேபோல், நடப்பு தொடரில் 116*, 51*, 99 என மூன்று இன்னிங்ஸில் 266 ரன்களை அடித்த திலக் வர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.

மிரட்டிய கிழக்கு மண்டலம்

துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப்போட்டி கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தட்டையான ஆடுகளம் காரணமாக வேகப்பந்துவீச்சுக்கோ அல்லது சுழற்பந்துவீச்சுக்கோ பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. இதனால் கிழக்கு மண்டல அணி பேட்டர்கள் அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு நீண்ட நேரம் பேட்டிங் செய்து ரன்களை குவித்தனர்.

708 ரன்களை குவித்த இஷான் கிஷன்

முதல் இரண்டு நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம் அணி 708 ரன்களை அடித்து ஆல்-அவுட்டானது. கேப்டன் இஷான் கிஷன் 270, விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா 101, ஷிகர் மோகன் 85, அபிமன்யூ ஈஸ்வரன் 72, அனுகுல் ராய் 45, சூர்யவன்ஷி 44, குரேஷி 40 என ரன்களை குவித்தனர். தெற்கு மண்டல அணி சார்பில் விஜய் 4, சாமா மிலிந்த் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் தலா 2, ஷேக் ரஷீத் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

திலக் வர்மா போராட்டம்

இதனை சேஸ் செய்வது சாத்தியமில்லை என்றாலும் தெற்கு மண்டல அணி முடிந்தளவிற்கு முயற்சித்து 336 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. நான்காவது நாளின் மதிய உணவு இடைவேளைக்கு முன்னரே தெற்கு மண்டலம் ஆல்-அவுட்டானது. கேப்டன் திலக் வர்மா 99, தேவ்தத் படிக்கல் 62, சாமா மிலிந்த் 43 என ஓரளவு பங்களிப்பை அளித்தனர். முகேஷ் குமார் 3, முகமது ஷமி மற்றும் ஷிகர் மோகன், குரேஷி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இடது கை சுழற்பந்துவீச்சாளர் அனுகுல் ராய் கைவிரலில் காயம் ஏற்பட்டதால் முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய களமிறங்கவில்லை.

மேலும் படிக்க | இஷான் கிஷன் 270... துலீப் டிராபி பைனலில் அதிக ரன்களை அடித்த 5 வீரர்கள்

டிக்ளர் செய்த கிழக்கு மண்டலம்

372 ரன்கள் முன்னிலை பெற்ற கிழக்கு மண்டலம் அணி ஏறத்தாழ அப்போதே வெற்றியை உறுதிசெய்துவிட்டது. தொடர்ந்து, கிழக்கு மண்டலம் அணி மீண்டும் பேட்டிங்கை தொடங்கியது. நேற்று இரண்டு செஷன், 5வது நாளான இன்றும் முதலிரண்டு செஷன் என இரண்டாவது இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது.

குரேஷி சதம்

710 ரன்கள் முன்னிலை உடன் டிகளர் செய்தது. கிழக்கு மண்டல அணியில் குரேஷி 116, இஷான் 80, அனுகுல் ராய் 64, ஷிகர் மோகன் 52 ரன்களை அடித்தனர். தெற்கு மண்டலம் பந்துவீச்சில் நிதீஷ் 2, ஷேக் ரஷீத், முகமது சிராஜ், விஜய், சாமா மிலிந்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

13 ஆண்டுகளுக்கு பின்...

இரு அணிகளின் கேப்டன்களும் டிராவுக்கு ஒப்புக்கொள்ள கிழக்கு மண்டலம் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு மண்டலம் அணி துலீப் டிராபி கோப்பை தொடரை வென்றிருக்கிறது. அதேநேரத்தில், இஷான் கிஷன் தலைமையில் ஜார்க்கண்ட் அணி சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

துலீப் டிராபியில் அடுத்தாண்டு...

அடுத்த 2027-28 துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளன. தொடர்ந்து, வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம் அணிகள் காலிறுதியில் விளையாடும்.

மேலும் படிக்க | Explained: பிசிசிஐ-யுடன் கைகோர்த்த ChatGPT... ரூ. 130 கோடி டீலின் பின்னணி என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES